Saturday, January 15, 2022

 பிறப்பின் ரகசியம்

நிம்மதியை தேடிச் செல்லு முன்னர், பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்வதும் இந்த பயணத்தில் துணையாக அமையக் கூடியதாகும். அல்லது சிலபோது ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிவரவும் துணை செய்யலாம். அந்த பிறப்பின் ரகசியம் பற்றி பல விளக்கங்கள் உண்டு. அதில் ஒன்று கீழ்வருமாறு: 

ஆதி-பரம்-பொருள் எனும் பதம் பலருக்கும் புரியாத வொன்றாக அமையலாம். அப்படி புரியாத வொன்றைக் குறிக்கவே ஆதி பரம்பொருள் எனச் சொல்லப்படுகிறது என்பது சற்று புரியக்கூடியதாக இருக்கும் அல்லவா,,,,,,,,,, அந்த ஆதி பராம்பொருள் விண்ணுலகில் வாழக்கூடிய தேவலோகத்தாரை படைத்தது என்பது ஒரு பொது அபிப்பிராயம். அதன் பின் இன்னும் பல படைப்பினங்களை படைத்தது என்பதும் ஒரு பொது அபிப்பிராயம். அந்த படைப்பிணங்களுள், ஜூராஸிக் எனும் யுகத்தில் பிரமாண்டமான மிருகங்கள் இப் பூமியிலே வலம்வத்தன வந்தன என்கிறது விஞ்ஞானம் அல்லது மனித பகுத்தறிவு.

விண்ணுலகிலே தேவர்களை படைத்த இறைவன், அதிலே சுவர்க்கம் என ஒன்றை படைத்து அதில் வாழ்வதற்கென மனிதன் என்பவனை படைத்தான். மனிதன் பொருட்களை உருவாக்கும் பொழுது சில கழிவுகள் எஞ்சுவதுபோல், இறைவனது படைப்பு செயல்முறையின்போதும் கழிவுகள் உருவாகுமோ என்னவோ, அதுபோன்ற கழிவுகளை போட்டு நிரப்புவதற்காக நரகம் எனும் தீக்குளியையும் படைத்தான். அதன்பின் சுவர்க்கத்தில் வாழக்கூடிய மனிதர்களை தகுதி காண்பதற்காக உலகிற்கு அனுப்பி வைத்தான் (பார்க்க திருக்குர்'ஆன் 67-2). உலகிலே சிறப்பாக வாழ்ந்த மனிதனை சுவர்க்கத்தில் வாழச் செய்து, மற்றவர்களைக் கொண்டு நரகை நிரப்புவான் (32:13). அவர்களில் சிலரை தனது கருணையின் நிமித்தம் சிறிது காலத்தின் பின் நரகை விட்டும் வெளியேற்றி சுவர்க்கத்தில் வாழும் பாக்கியத்தைக் கொடுப்பான் என்கிறது நபி மொழி (புஹாரி: 6192, முஸ்லிம்: 814). மற்றவர்களின் நிலை என்ன என்பதை படைத்தவன் அந்த பரம் பொருள் ஒருவனே அறிவான். மேற்சொன்னவைகள் மனிதர்கள் பின்பற்றும் வேதங்கள் முன்வைக்கும் கருத்துக்களின் சாரம்சமாகும்.

அந்த பரம்பொருளின் கருணையே உன்னை இங்கோ கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்பதை இப்பொழுது நீ விளங்காவிட்டாலும், தொடர்ந்தும் இங்குள்ள பதிவுகளை கடந்தது செல்லும்போது விளங்கிக் கொள்வாய்,,,,,,,,,,,,,,,,

தொடர்புடனிரு ,,,,,,,,,,,,, 

அடுத்த தொடர் 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...