Showing posts with label 0-முகப்பு. Show all posts
Showing posts with label 0-முகப்பு. Show all posts

Wednesday, March 2, 2022

 


 வரவேற்பு

"நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டவைகளாகும். எனவே, அவைகளுக்கிடையில் காணப்படும் தொடர்பறுந்த நிலை சிலபோது வாசர்களுக்கு சிறு அதிருப்தி தருவதாக அமையலாம். அவ்வாறு அவைகளை தொடர்புபடுத்தி மீண்டும் வடிவமைக்க இன்னும் அதிக காலம் தேவைப்படுமாகையால், வாசகர்களின் நன்மை கருதியே அவை இங்கு பதிவிடப்பட்டுள்ளன என்பது திருப்தி தருவதாக அமையுமல்லவா.........?   

இங்குள்ள எல்லா ஆக்கங்களையும் ஒரேயடியாக வாசித்து முடிக்காமலும், மேலும் நுனிப்புல் மேயாலும், ஆறுதலாகவும், தெரிவின் அடிப்படையிலும், படிப்படியாக வாசிப்பது, அதிக பலன் தரக்கூடியதாக அமையும் என்பது கருத்திற் கொள்ளத்தக்கதாகும்.  

ஆக்கங்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுவதுடன், தமிழுலகிற்கு இவைகளை கொண்டு செயல்வதில் உங்களின் பங்களிப்பும் வேண்டப்படுகிறது.  

இங்கே 40ற்கு மேற்பட்ட ஆக்கங்கள் பல்வேறு தலைப்புகளில் பதிவிடப்பட்டுள்ளன. இதுபோன்ற வலைத்தளங்களுடன் பரீட்சயமில்லாதவர்களுக்கு அவைகளை எப்படி திறப்பது என்பது தெரியாமலிருக்கலாம். அவர்கள் சற்று முயற்சித்தல் இலகுவாக அவைகளை கண்டறிந்து கொள்ளலாம் என்பது வாசகர் நன்மைகருதி சுட்டிக்காட்டப் படுகிறது. 

முகப்பு

Saturday, January 15, 2022

 நிம்மதி தேடி

பிறப்பு முதல் மனித வாழ்க்கை என்பது ஒரு நிம்மதி நாடிய பயணம் எனலாம். பிறந்த குழந்தைக்கு முதலாவது தேவைப்படுவது சுவாசம். அதை முறையாகக் கொடுக்காவிட்டால் வாழ்வே நிம்மதியற்றதாக ஆகிவிடும் என்பதை மருத்துவ அறிஞர்கள் நன்கறிவர். அதன் பின் தேவைப்படுவது உணவு. இந்த இரண்டும் சேர்ந்து இன்னும் எத்தனையோ தேவைகளை உருவாக்கி விடும் என்பது உளவியல். 

இப்படியாக, வளர்ந்து நடக்க ஆரம்பித்த மனிதனிடம் தேடல் எனும் அம்சம் வந்து விடும். அந்த தேடலே ஒவ்வொரு குழந்தையையும் வித்தியாசமாக உருவாகச் செய்கிறது. 

அதன்பின் சற்று வளர்ந்தவுடன் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன. தாய் தந்தை, உற்றார் உறவினர், அயல் வீட்டார், நண்பர்கள் என பல்வேறு திசைகளிலிருந்தும் தொல்லைகள் வர ஆரம்பிக்கின்றன. அவற்றில் சில ஊக்கங்களாக இருக்கலாம் இன்னும் சில தாக்கங்களாக இருக்கலாம். அனால் பொதுவில் அவை உறுத்தல்களாகவே அமையும்.    

இந்தத் தொல்லைகளிலிருந்து விடுபடவேண்டும் என ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஊக்கங்கள் அல்லது தேடல்கள் உருவாகும். அவை சிலபோது இன்னும் பல தொல்லைகளில் சிக்கிவிடச் செய்யும். அதிலிருந்து விடுபட மீண்டும் ஊக்கங்கள் உருவாகும். இப்படியே தேடலும், அடைதலும், சிக்கலும் என்று வாழ்க்கை தொடர்ந்து கொண்டே செல்லும். இதுதான் இந்த உலக வாழ்க்கையின் இயல்பு,,,,,,,,,,,,,,,,,,

அந்த இயல்புதான் நாம் காணுகின்ற அழகான இந்த உலகை ஆக்கிவிட்டுள்ளது. தொலைதொடர்பு சாதனங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், போக்குவரத்து வசதிகள் என இன்னோரன்ன தொழில் நுட்பங்களும், அறிவியல் சாதனைகளும் அவற்றின் விளைவே. அந்த தேடல் இல்லாமல் போகவேண்டுமாக இருந்தால், தொல்லைகள் நீக்கப்படவேண்டும். தொல்லைகள் நீங்கி, தேடலும் இல்லாமல் போய்விட்டாள், நாம் காணுகின்ற இந்த உலகின் அனைத்து முன்னேற்றங்களும் இல்லாமல் போய்விடும். ஆதலால் தொல்லையும், தேடலும் மனித வாழ்வுடன் இன்றியமையாது என்பது முதற்கண் விளங்கத்தக்கது. 

ஆனால் அந்த தொல்லைகளும் தேடல்களும் அளவுக்கு அதிகமாகப் போய்விடுவதுவே மனித வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாத அம்சங்களாக ஆகிவிடுகின்றன. எனவே அவரவர் தனது தேடல்களை வரையறுத்துக்கொள்வதும், அடுத்தவர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்துத்துக்கொள்வதும், அந்த தேடலையும், தொல்லைகளையும், கட்டுப்படுத்த துணை செய்யும் அல்லவா............... 

அதை எப்படிச் செய்யலாம்? அது ஒரு கலை. அதில் தேர்ச்சி பெறுவது அத்துணை இலகுவான காரியமன்று. காரணம் அவ்வாறு தேர்ச்சி பெறுவதற்குத் தடையாக எத்தனையோ காரணிகள் இருப்பதாகும். எனவே முதற்கண் அந்த கலையைக் கற்றுக் கொள்வது எனத் தீர்மானித்துக்கொள்வதை முதற் படியாகக் கொள்ளலாம்.  

தொடரும் ,,,,,,,,,,,,,,,,,,,

அடுத்த தொடர்

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...