Showing posts with label 2-நிம்மதி என்றால். Show all posts
Showing posts with label 2-நிம்மதி என்றால். Show all posts

Sunday, January 16, 2022

 மன நிம்மதி

நிம்மதி என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்டது. எனவே நிம்மதி எப்படி வரும் என்பதை தெரிந்து கொள்ள மனம் (உள்ளம்) என்பதைப் பற்றி சற்று தெரிந்துகொள்வது அவசியமாகும். மனம் என்பதன் ஒரு முக்கிய அங்கமே தான்னுணர்வாகும் (conciousness). ஒரு மனிதன் தன்னுணர்வுடன் இருக்கிறான் என்றால் அவன் உயிருடன் இருக்கிறன் என அர்த்தம். அவன் தன்னுணர்வை இழந்துவிட்டான் என்றால் இறந்து விட்டான் என அர்த்தம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட சில நிலைகள் இருந்தாலும் அவை  விரிவு கருதி தவிர்த்துக்கொள்ளப்படுகிறது.

ஒருவன் தன்னுணர்வுடன் இருக்க வேண்டு மென்றால் அவனிடத்தில் எண்ணங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு எண்ணங்கள் இருந்தால் அவை சும்மா இருக்காது. ஒன்று மாறி ஒன்று மாறி உருவாக்கிக் கொண்டு அல்லது மீண்டெழுந்து கொண்டே இருக்கும். அவ்வாறு எண்ணங்கள் உருவாவதை ஒருவனால் தடுத்துக்கொள்ள முடியுமாக இருந்தால் அது “யோக” தியான முறைப்படி மாத்திரமே நடைபெறலாம். எனவேதான் அவ்வாறு எண்ணம் உருவாவதை தடுத்துக்கொண்டவர்கள் நாற்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் தியான நிலையில் இருப்பதாக  சொல்லப்படுகிறது. அந்நிலையை  உண்மையில் உணர்வற்ற நிலை என்று  சொல்வதே பொருத்தமாகும். அதன் மறுபக்கமாக உணர்வுடன் இருப்பவர்களிடத்தில் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். அவ்வாறு எண்ணங்கள் உருவாகிக் கொண்டிருந்தால் நிம்மதி இல்லாமலேயே இருக்கும். எனவே நிம்மதி கிடைக்கக்கூடிய ஒரே வழி தன்னுணவற்றுப்போதல் எனலாம் (தன்னுணர்வு என்பது பற்றி மேலே சொல்லப்பட்டதை பார்த்துக் கொள்ளவும்).

ஒரு மனிதன் தூங்கும்போது எண்ணங்கள் சற்று ஒய்வு பெறுவதுண்டு. எனவே அதை தற்காலிக மரணம் எனச் சொல்வதுண்டு (பார்க்க திருக்குர்'ஆன் 39:42). ஒருவன் மயக்கமுறுவதும் அது போன்றதே. குறிப்பாக மருத்துவக் காரணத்துக்க மேற்கொள்ளப்படும் மயக்க நிலை மரணத்துக்கும்உயிர்ப்புக்கும் இடைப்பட்ட நிலையாகும் என்பதை மருத்துவர்கள் நன்கறிவர்.   மதுபானமும் ஏனைய போதை வஸ்துப் பொருட்களும் அது போன்ற நிலையை ஏற்படுத்துவதாக கொள்ளப்பட்டாலும் அவற்றினால் ஏற்படும் பக்க விளைவுகள் மனிதனுக்கு மிகவும் பாதகமாக அமைந்து விடுகின்றன என்பதாகவே மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.   

இப்படியாக எண்ணங்கள் என்பன ஒரு மனிதன் உயிர்ப்புடடன் இருக்கிறான் என்பதுடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக இருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.  எனவே நிம்மதி என்பதனூடாக நாடக்கூடியது ஒற்றில் எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் அல்லது அது உருவாகும் வேகத்தைக் குறைத்துக் கொள்கொள்ளலாகும் எனலாம். அப்படியென்றால் எவ்வாறு எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வது அல்லது அதன் உருவாக்க வேகத்தைக் குறைதத்துக் கொள்வது எனும் கேள்வி எழுவது சாதாரணமே. அதைப்பற்றிப் பேசுவதே இந்த பதிவின் நோக்கமாகும்.    

தொடரும்,,,,,,,

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...