Saturday, January 22, 2022

 ரொட்டி வியாபாரி  

ஒரு ரொட்டி வியாபாரி; அதிகாலையில் எழுந்து காலைக்கடன்களை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு, தேங்காய் உடைத்து, திருவி, கோதுமை மா பிணைந்து, ரொட்டி சுட்டு, சந்தைக்கு சுமந்து சென்று, விற்று, கிடைத்த பணத்தின் ஒரு பகுதியில் அடுத்த நாள் ரொட்டி சுடுவதற்கான தேங்காய், கோதுமை மா மற்றும் எரிபொருட்களை வாங்கி வந்தான்.

அந்த ரொட்டி வியாபாரி தேங்காய் திருவுவதை மாத்திரம் கண்டு விட்ட இன்னுமொருவன் தானும் அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை நிதானமாக முடித்துக் கொண்டு, அழகாகவும் நேர்த்தியாகவும் உடை உடுத்து, மிக நிதானமாக தேங்காயை எடுத்து, அதைத் துப்பரவு செய்து, மிகக் கவனமாக உடைத்து, மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அதை திருவினான். அவன் தேங்காயை திருவி முடிக்கும் போது மாலை வேலையாக இருந்தது. அவன் ஏன் தேங்காய் திருவினான் என்பது அவனுக்கே தெரியாது. திருவிய தேங்காயை என்ன செய்வதென்றும் தெரியாது. அதை பக்குவமாக ஒரிடத்தில் வைத்து விட்டான்.

இஸ்லாத்தை முழுமையாக நோக்குகின்ற ஒருவனுக்கும், அரைகுறையாக நோக்குகின்றவனுக்கும் இடையிலுலுள்ள வித்தியாசம் இந்த இரண்டு பேருக்கிடையில் உள்ளது போன்றதாகும்.

இஸ்லாம் என்பது முழு மனித வாழ்க்கையையும் உள்ளடக்கிய ஒரு சமூகக் கோட்பாடாகும். ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும்; காலையில் எழுந்தது முதல் மாலையில் தூங்கும் வரைக்குமுள்ள சகல அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கோட்பாடே இஸ்லாமாகும்.  

அதிலே வணக்கம் இருக்கிறது. வியாபாரம் இருக்கிறது, கொடுக்கல் வாங்கல்கள் இருக்கிறது, திருமனம் இருக்கிறது, குடும்ப வாழ்க்கை இருக்கிறது, அரசியல் இருக்கிறது, சட்டமும் நீதியும் இருக்கிறது. இன்னும் மனித வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்ட இன்னோரன்ன விடயங்கள் எல்லாம் இருக்கின்றன.  

அந்த தேங்காய்த் திருவி எதற்காக தேங்காய் திருவுகிறோம் என்று தெரியாமல் தேங்காய் திருவியதைப் போல், இஸ்லாத்தின் அம்சங்களில் ஒன்றை அல்லது இரண்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு, அதிலே அழகு பார்த்து, நிதானமாகவும்  நேர்த்தியாகவும் செய்து விட்டு, இஸ்லாத்தை வாழ்க்கையில் சரிவர பின்பற்றி விட்டகாத சிலர் நப்பாசை கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாத்தைப் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், “நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருதிக்கட்டம் வரைக்கும் அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது போல் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் இருதிக் கட்டம் வரைக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும், படிக்க வேண்டிய ஏராளமான விடயங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனவே யாரும் சிலகாலம் எங்காவது போய், ஏதாவது சிலதை படித்துக் கொண்டு அது தனக்கு புதிது என்பதற்காக மற்றவர்களுக்கெல்லாம் அது தெரியாது என நினைத்துக்கொண்டு, மற்றவர்களை பிழை காணும் போக்கில் நடந்து கொள்வது, காரணம் தெரியாத தேங்காய் திருவியின் செயலுக்கு ஒப்பாகும்.    

மாறாக, இஸ்லாத்தைப் பாற்றி ஓரளவாவது முழுமையாக விளங்கிக் கொண்டவன் இஸ்லாத்தின் எல்லா அம்சங்களையும் ஒரே நேரத்தில் கருத்தில் கொண்டே தனது வாழ்க்கைச் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வான். எனவே சில விடயங்கில் சில குறைபாடுகள் இருக்கலாம். சிலவற்றை நேர்த்தியாக செய்யாது விடலாம். ஆனால் அவன் முழுமையான ஒரு பணியை செய்பவனாக இருப்பான்.  

இஸ்லாத்தில் தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்பன எதற்கா இருக்கின்றன என்பதை அல்குர்ஆன் தெளிவாகவே கூறுகிறது (பார்க்க 7:65, 2:21, 2:183, 2:197, 22:27). அதே போல் குடி (மது), களவு, விபச்சாரம், பொய்சாட்சியம் கூறல், இட்டுக்கட்டல், கொலை என்பன போன்ற குற்றச்செயல்கள் ஒரு சமூகத்தில் இருப்பது தவிர்க்க முடியாததாகும். அந்த பிழைகளை கட்டுப் படுத்தும் விதமாக இஸ்லாம் ஒரு சமூக அமைப்பை நிறுவி அதில் நிறுவாகக் கட்டுப்பாடு இருப்பதைப் போதிக்கிறது. அந்த நிருவகத்துக்கு கட்டுப் படுவதை இபாதத்தாக கருதும் இஸ்லாம், அந்த நிறுவாகம் இல்லாத போது அதை உருவாக்குவதற்காக பாடுபடுவதை ஜிஹாத் ஆக கருதுகிறது.  

அதே போல், அல்லாஹ்வின் திருப்தியைப் பெரும் நோக்கில் சமூக சேவைகளில் ஈடுபடல், தான தர்மம் கொடுத்தல், நன்மையை ஏவி தீமையை விலக்கல் என்பனவற்றையும் இஸ்லாம் ஊக்கிவிக்கிறது. அத்துடன், இஸ்லாமிய சமூக சீர்த்திருத்தம் மற்றும் இஸ்லாத்தைப் பாதுகாத்தல் ஆகி நோக்கத்துடன் ஜிஹாத் புரிவதையும் ஊக்குவிக்கிறது.

இவை அனைத்துக்கும் அப்பால், அல்லாஹ்வின் தூதர் மீதுள்ள அன்பின் காரணமாக் அல்லாஹ்வின் தூதர் செய்த சில பல விடயங்களைச் செய்வதும் இஸ்லாத்தினுல் இருக்கிறது.

ஆனால் இங்கு சொல்லப்பட்டவைகள் மற்றும் சொல்லத் தவறியவைகள் ஆகிய இஸ்லாம் போதிக்கும் முழுமையான வாழ்க்கைக் கோட்பாட்டை மறந்து, அதிலுள்ள சிலதை மாத்திரம் எடுத்துக் கொண்டு அவைகளை மையமாக வைத்து சமூகத்தில் பிழவுகளையும், பிரச்சிணைகளையும், குழப்பங்களையும், சீறழிவுகளையும் உண்டுபண்ணும் விதமாக நடந்து கொள்வது எந்த விதத்திலும் இம்மையிலும் மறுமையிலும் பயன் தரத்தக்கதாக அமையாது.

ஒரு மனிதன் வாழ்க்கையில் என்னதான் சாதனைகள் புரிந்திருந்தாலும், அல்லது வாழ்வதைத் தவிற வேறு எதயும் செய்யத் தெரியாத ஒரு கூலித் தொழிலாழியாக இருந்தாலும் இருவரும் அடையக்கூடிய மகத்தான பேரு நரகை விட்டும் தப்பி சுவர்கத்தில் நுழைந்து விடுவதாகும். இந்த இலக்கை அடைவதென்றால் அந்த சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்த அல்லாஹ்வின் கட்டளைப்படி தனது வாழ்க்கையையும், தான் செய்யக் கூடிய வணக்க வழிபாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாரில்லாமல் தனது புத்திக்கு ஏதோ ஒன்று சரியெனத் தோன்றுவதால் அதனைச் செய்து சுவர்க்கத்துக்கு போக நினைப்பதுசாமிரிய்யுவேலையாகவே அமையும். (பார்க்க குர்ஆன் 20:96)

தொடரும் ....

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...