Saturday, January 22, 2022

 பள்ளிவாயல்கள் (மஸ்ஜித்கள்)

மஸ்ஜிதைப் பற்றிச் சொல்லும் போது நாம் சிறப்பாகக் குறிப்பிடக்கூடிய ஒரு அம்சம் மஸ்ஜிதைப் பற்றி அரபு அமீரகத்தில் (UAE) குறிப்பிடப்படும் ஒரு கூற்றாகும். அதாவது மஸ்ஜித்கள் எமது நாகரித்தின் அடையாளச் சின்னங்கள்என்பதே அதுவாகும். இந்தக் கூற்றிலே பல்வேறு அம்சங்கள் பொதிந்திருப்பதை நாம் காணலாம். அதில் ஒன்றுதான் முஸ்லீம் சாமுகத்தின் நல்லது கெட்டது எல்லாம் இந்தப் பள்ளிவாயல்களைப் பார்த்தால் இலகுவாகப் புரிந்து விடும் என்பதாகும்.

ஒருவர் கலதாரி ஹோட்டலிலே வந்து தங்கியிருக்கும் ஒரு நபரை சந்திக்கப் போகிறார் என வைத்துக் கொள்வேம். அவர் தான் ஜிம்முக்குப் போய் வருகிறார் என்பதற்கா முலங்கால் வரைக்கும் நீளமான ஒரு ஸ்போட்ஸ் கல்சானை அணிந்து கொண்டு, ஒரு டீ ஷர்ட்டையும் அணிந்துகொண்டு சொல்வாரா அல்லது இரவலகவாவது ஒரு ஆடையையும் சப்பாத்தையும் பெற்று அவற்றை அணிந்து கொண்டு செல்வாரா?

ஆனால் நாம் இறை இல்லமாம் பள்ளிவாயலுக்குக் கொடுக்கும் மரியாதையும் கெளரவமும், அனாச்சாரங்கள் பல நடக்கும் ஒரு ஹோட்டலுக்கு கொடுக்கும் மரியாதை அளவு கூட இல்லை. ஏன் அப்படி எனக் கேட்டால் உலமாக்கள் எங்களுக்கு தொழுகைக்கான அவ்ரத்தைப் பற்றி இப்படித்தான் சொல்லித்தந்துள்ளார்கள் எனக் காரணம் கூறக்கூடிய பலர் எம்மில் இருப்பர். அப்படியானால் அவர்களின் சுய புத்தி எங்கே சென்று விட்டது. மற்ற இடங்கள் எல்லாவற்றுக்கும் சிறப்பாக ஆடை அணிந்து செல்ல முடியும், அங்கே போய் மிக கண்ணியமாகவும், பக்குவமாகவும் நடந்துகொள்ள முடியும், ஆனால், பள்ளிவாயலைப் பொறுத்தவரை, மாமியார் வீட்டையும் விட மோசமான நிலைமையே….

 

மார்ர்கத்தைப் பற்றி நாம் விளங்கிக்கொள்ளவேண்டிய ஒரு அடிப்படை விடயம் என்னவெனில் மார்க்கத்திலே பல சளுகைகள் தரப்பட்டிருப்பது பொடுபோக்காக இருப்பதற்காக அல்ல. மாறாக தம்மால் இயலாதபோதும், பல்வேறு வித்தியாசமான சந்தர்ப்ப சுழினிலைகளுக்கேற்பவும் வழங்கப் பட்டுள்ள சலுகைகளே அவைகளாகும்.

 

இன்று முஸ்லீம்களின் நிலை எப்படியென்றால், படுக்கையிலிருந்து எழும்பியவுடன், அதே முகத்துடன் பள்ளிவயலை நோக்கிப் போவதாகும். அங்கு போய்தான் ஏனய எல்ல விடயங்களும். இப்படியாகத்தான் பள்ளி வாயலைப் பற்றிய எமது மனோ நிலை அமைந்துள்ளது.

 

பள்ளிவாயல்களில் மலசல கூடங்களும் வுழு செய்யக் கூடிய வசதிகளும் அமைத்துத் தரப்பட்டிருப்பது, வீட்டிலே தன்னீர்ப் பாவனையை மிச்சம் பிடித்துக் கொள்வதற்காக அல்ல. பள்ளிவாயலுக்கு ஒருவன் போகுமுன்னர் கைகாள் முகம் கழுவி சுத்தமான ஆடை அணிந்து கொண்டு செல்லவேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது. அதுபற்றி சொல்லும் ஹதீஸ்கள் ஏராளம். ஆனால் பலருக்கு பள்ளிவாயலை சென்றடைந்துவிடுமுன் வுழு முறிந்துவுடும் என்ற அச்சத்தினாலோ என்னவோ அப்படி யாருமே வுழு செய்து கொண்டு பள்ளிக்குச் செல்வதை நினைத்துக்கூட பார்ப்பதில்லை. சரியாகச்சொன்னால் ஹவுழு என்பது நபி (ஸல்) அவர்களது காலத்தில் காணப்படாத ஒரு பித்அத்தான விடயமாகும். எல்லா பித்அத்துகளையும் தேடிக்கண்டுபிடிக்கின்றவர்கள் இந்த பித் அத்தைக் காணத் தவறியது எந்த காரணத்தினாலோ தெரியாது.

 

ஒன்று மாத்திரம் சரியாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும்: எமது பள்ளிவாயலுக்கு கண்ணியம் கொடுக்க எமக்கே தெரியாவிட்டால், எமது பள்ளிவாயலில் பக்குவமாக நடந்துகொள்ள எமக்கே தெரியாவிட்டால், கந்தனும், சோமபாலவுமா கண்ணியம் கொடுக்கப் போகிறான்……….?

 

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, பள்ளிவாயல் என்பது உயிருள்ள தனக்கு நேசத்துக்குறிய ஒரு மனிதரைப்போன்றதாகும். அதனால் தான் பள்ளிவாயலுக்குள் நுலைந்ததும் அவன் அதற்கு சலாம் சொல்வதற்குப் பகரமாக இரண்டு ரக்அத்துகள் தொழுகிறான். அதற்குப் பெயர் தஹிய்யதுல் மஸ்ஜித். “தஹிய்யாஎன்றால் வாழ்த்துச் சொல்லல். அதாவது, “அஸ்ஸலமு அலைக்கும்”, “குட் மோர்னிங்”, “ஆயுபோவன்எனச்சொல்கின்றவை அனைத்தும் வாழ்த்துக்களே. அதுபோல் தனக்கு நேசத்துக் குறிய பள்ளிவாயலுக்கு வாழ்த்துச் சொல்லும் முறைதான் அங்கு சென்றவுடன் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதாகும். அது சுன்னத்துத் தானே என பலுரும் கருதுவதால்தான் பள்ளிவாயலுக்கு இன்று இந்த இழி நிலை.

 

பள்ளிவாயல் என்பது இறை இல்லம். அதை அல்லாஹ்வின் மாளிகை என்றும் சொல்வர். மாளிகை என்றால் அது ஆடம்பரங்கள் நிறைந்த ஒரு இடம் என்பதாகத்தான் எமது உள்ளம் நினைத்துக் கொள்ளும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் மாளிகை என்பது உண்மையில் மிகவும் கண்ணியமிக்க ஒரு இடமாகும். அங்குதான் அரசன் இருப்பான். அங்கு கவலாளிகள் இருப்பர். அங்கே கொஞ்சமாவது இசகுபிசகாக / கவனயீனமாக நடந்து கொண்டால் உடனே காவலாளிகளால் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று, தண்டனைகளும் வழங்கப் படும். அதுதான் மாளிகையின் உண்மை நிலை. மாளிகை என்பதை எமது பாசையில் சொல்வதென்றால் அது பாராலுமன்றத்துக்கு ஒப்பானதாகும். அப்படியான ஒரு இடமே பள்ளிவாயலாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாயல் என்பது பாராலுமன்றம் என்பதையும் தாண்டி இன்னும் பல அமைச்சுகளிலின் பணிகள் நடை பெரும் இடமாகவே அமைத்திருந்தது. அவ்வளவு கண்ணியமிக்க பள்ளிவயலின் நிலை எம்மத்தியில் எந்தளவு கேடு கொட்ட நிலைக்கு மாறியுள்ளது. இதற்கு யார் காரணம்……………………………….?

சரியாகச் சொன்னால் பள்ளிவாயளின் கண்ணியத்தைப் பற்றியும், அதில் நடந்து கொள்ளக்கூடிய முறைகள் பற்றியும் பேசாத, பேச நினைக்காத ஒவ்வொருவரும் காரண கர்த்தாக்களே.

 

சுன்னாக்களைப் பின்பற்றுவது பற்றி போதிக்கப் படுகிறது. அதை பின்பற்றுவதிலேயே இம்மை மறுமையின் வெற்றி தங்கி யுள்ளது என வழியுறுத்தப் படுகிறது. சுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்காக பிரச்சிணைகளே உருவாக்கப் படுகிறது. ஆனால் பள்ளி வாயலுக்கு போகும் போது வுழூ செய்து கொண்டு போகவேண்டும் என ஹதீஸ்களில் எவ்வளவு வழியுறுத்தப் பட்டுள்ளது. இந்த சுன்னாவை பின்பற்றுவது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளாத காரணம் என்னவாகத்தான் இருக்கும்.…………………………….?

 

சுன்னாவை பின்பற்றுவதிலேதான் இம்மை மறுமையின் வெற்றி தங்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் வெறுமனே அதைச் சொல்லிச்சொல்லி காலத்தைக் கடத்தாது சுன்னாக்களை அதன் தாத்பரியங்களை விளங்கி பின்பற்றக்கூடிய நிலை உறுவாக வேண்டும். பள்ளி வாயலுக்கு போகும் போதுவழூசெய்து கொண்டு போவது, “தஹிய்யதுல் மஸ்ஜித்என்ற தொழுகையை முறையாக தொழுவது, மற்றும் பள்ளிவாயலினுள் கண்ணியமாக நடத்து கொள்வது என்பது எல்லாமே வழியுறுத்தப் பட்டுள்ள சுன்னாக்களே. பள்ளி வாயலுடன் சம்பத்தப் பட்ட இந்த சுன்னாக்கள் கண்டிப்பாக ஹயாத்தாக்கப் படவேண்டிய சுன்னாக்கள் என்பது சரியாக உணரப்பட்டு/ உணர்த்தப் பட்டு, அதைப் பின்பற்றும் நிலை உறுவாவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

 

ஆதமின் சந்ததிகளே..! தொழுமிடங்களிலெல்லாம் உங்களது அலங்காரங்களை பற்றிக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 7:31) என்று சொல்லும் அல்குர்ஆன் பள்ளிவாயல்கள் சிறப்பாக அமைக்கப் படவேண்டும் என்ற விடயத்தையும், அங்கு வரக்கூடிவர்கள் சிறந்த தோற்றத்தில் சமூகளிமளிக்க வேண்டும் என்ற கருத்தையும் போதித்துக் கொண்டிருப்பது பள்ளிவாயல்கள் இஸ்லாத்தின் அடையாளச்சின்னமாக அமையும் என்பதனாலும், அங்கு வருகின்ற முஸ்லிமல்லாத ஒருவருக்கு முதல் பார்வையிலேயே இஸ்லாத்தைப் பற்றி புரிந்துவிடும் என்பதனாலுமாகும். சிறுபான்மை சமூகமாக வாழக்கூடி முஸ்லிம்கள் தமது மார்க்கத்தின் தன்மையை பிறருக்கு விளங்க வைக்கக் கூடிய அடயாளச்சின்னமாக விளங்கும் இந்த பள்ளிவாயலுக்கு உரிய அந்தஸ்தும், கண்ணியமும் கொடுப்பது எல்லாவகையிலும் அத்தியவசியமான ஒரு விடயமாகும்.

 

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...