Saturday, January 22, 2022

 அரசியல் களம்

ஆடுகளங்களிலே ஆடுவதற்கு மிகக் கடுமையான களம் அரசியற்களம் என்றால் அது மிகையாகாது. ஒரு காலத்திலேயே வாழ்வு அல்லது சாவு என்பதாகவே அரசியற்களம் காணப்பட்டது. இன்றய ஜனநாயக உலகில் அந்நிலமை சற்று குறைந்திருந்தாலும் சவாலின் அடிப்படைத் தன்மை அப்படியே காணப்படுவது கண்கூடு. இந்த அரசியற்களம் ஆடுவதற்கு மாத்திரமல்ல, அதுபற்றி பேசுவதற்கும் கடிணமானதேயாகும். அந்த அரசியற்களப் பிரவேசத்திற்கு சில தயார்நிலையில் கண்டடிப்பாக அவசியமல்லவா. அதுபற்றி சில அம்சங்களை முதற்கண் நோக்குவோம். 

 

இஸ்லாமிய வரலாற்றின் அரசியல் கதாநாயகன் ஹுசைன் பின் அலி பின் அபூ தாலிப் (ரழி) எனும் அம்சம் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் நியாயங்கள் அதிகம் நிறைந்ததாகும். பொது வாழ்விலாக இருக்கட்டும் அல்லது மார்க்க அனுஷ்டானங்களிலாக இருக்கட்டும் இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடத்தில் பல முன்னுதாரணங்கள் உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேவேளை சில நடைமுறை அம்சங்கள் கருத்தில் கொல்லப்பட்டு ஹுசைன் (ரழி) அவர்களை ஒரு இஸ்லாமிய அரசியற் கதாநாயகனாக எடுத்துக் கொள்வதில் தப்பில்லை எனும் அடிப்படையில் நடைமுறை அரசியல் களத்திலும் அவர் ஒரு கதாநாயகனாகக் கருதப்படுவது சாலப் பொருத்தமே. இந்த விடயத்தை நியாயப்படுத்த இன்னும் பல அம்சங்கள் இருந்தாலும் கூட விரிவு கருதி அவை இங்கு தவிர்த்துக் கொல்லப்பாடுகிறது. அதற்கிணங்க அரசியல்களப் பிரவேசத்தை விரும்பிகின்ற ஒருவர் ஹுசைன் (ரழி) அவர்களின் வரலாற்றை நன்கு கற்றுத் தேர்த்திருப்பது மாத்திரமன்றி, அவரது அரசியல் நகர்வுகள் மற்றும் அதிலுள்ள சரி, பிழைகள் என்பனவற்றையும் ஆராய்ந்து தெரிந்துவைத்திருப்பது போற்றத்தக்கதாகும்.

 

அதைத்தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவது அலி பின் அபூ தாலிப் (ரழி) அவர்களாகும். இவரின் வாழ்வும் நபி (ஸல்) அவர்களின் வாழ்வைப் போன்று பன்முகப் பட்டதாகையால், அரசியல் களப்பிரவேசத்தை நாடுகின்றவர்கள் இவரின் அரசியல்வாழ்வு மற்றும் அரசியல் வியூகங்களில் மாத்திரம் கவனம் செலுத்துவதே சாலப் பொருத்தமாகும். 

 

உமர் (ரழி) அவர்களின் வாழ்விலே அதிக அரசியல் படிப்பினைகள் காணப் படுகின்றன. குறிப்பாக, யாரும் அஞ்சக் கூடிய மிகச் சிறந்த ஒரு வீரனாக அவர் இருந்தும்கூட நபி (ஸல்) அவர்கள் தனது காலத்தில் மேற்கொண்ட யுத்தங்களிலே அவருக்கு முன்னுரிமை கொடுக்காமல் தனக்கு அருகாமையில் வைத்துக் கொண்டமை எதிர்கால தலைமையை உருவாக்குவதில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. திறமைமிகு ஒரு அரசியல் தலைவன் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் இதுவாகும் என்பது சந்தர்ப்பம் கருதி இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது. இதே விடயத்தை வலியுறுத்தினாற்போல் உமர் (ரழி) அவர்களில் வாழ்வில் ஒரு ஆட்சியாளனுக்குரிய முன்னுதாரணங்கள் அதிகம் காணப்படுவது கவனிக்கத்தக்கதாகும். ஒரு ஆட்ச்சியாளன் இப்படித்தான் இருக்கவேண்டும் எனும் வரைவிளக்கணத்தை நிறுவிய பெருமை உமர் (றழி) அவர்களையே சாரும் என்றால் அது மிகையாகாது.     

 

முதல் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களின் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் அதிலே ஒரு அரசியல் துணைவனுக்கான முன்னுதாரணங்களே அதிகம் காணப் படுவதைக் காணலாம். அதன் மறுபக்கமாக உஸ்மான் (ரழி) அவர்களின் வாழ்விலே அரசியற் தவறுகள், மாற்றும் அதன் விளைவுகள் போன்றவற்றைக் காணலாம். அதிலும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய பல படிப்பினைகள் பொதிந்ததே இருக்கின்றன. தனது ஆடசிக் கெதிராக திரண்ட மக்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்காமல் அமைதி வழியில் தீர்வு காண முயற்சித்த முதல் அரசியல் தலைவர் உஸ்மான் (றழி) ஆகத்தான் இருக்கவேண்டும்.  

 

இப்படியாக இஸ்லாமிய வரலாற்றிலே நாம் கற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள் அதிகம் உண்டு என்றவகையில், அலி (றழி) அவர்களின் ஆட்ச்சியைத் தொடர்ந்துவந்த “உமையா” மற்றும் அப்பாஸிய ஆட்ச்சியாளர்களின் வரலாறுகளையும் தெரிந்துவைத்திருப்பது அவசிப்படுகிறது.

 

அது போலவே உலகில் தோன்றிய சிறந்த அரசியல் தலைவர்களான அப்துல் கலாம்”, “பராக் ஒபாமா”, “நெல்சன் மண்டேலா”, “லீ குவான்”,  மாவோ சேதொங்”, “வின்ஸ்டன் ஷேர்ச்சில்”, “ஆபிரகாம் லின்கோன்”, “மோகன்தாஸ் காந்தி” போன்ற இன்னோரன்ன அரசியல் தலைவர்களின் வரலாறுகளையும், அவற்றில் பொதிந்துள்ள அரசியல் வியூகங்களையும் நன்கு படித்துத் தெரிந்திருப்பதும் போற்றத்தக்கதாகும்.    

இவை தவிற அரசியல் முறைமைகள், பொருளாதார கோட்பாடுகள், சமூகவியல் சித்தாந்தங்கள் உட்பட, நாட்டின் சட்ட யாப்பு, சர்வதேச சட்டங்களும் அவற்றின் அமைப்புகளும், உள்நாட்டு சட்டங்கள் ஆகிய பல்துறை சார் அறிவும், தனது அரசியல் இலக்குகள் மற்றும் செல்வாக்குப் பரப்புடன் சம்பத்தப் பட்ட குறிப்பிட்ட துறைசார் அறிவுவையும் வளர்த்துக் கொள்வதில் ஈடுபாடு காட்ட வேண்டும். அவ்வாறே தொடர்பாடல் (communication) மற்றும் மனித உறவுகள் (human relation) ஆகியன சம்பந்தமான அம்சங்கள் நவீன உலகில் சிறப்பாக வளர்ச்சி கண்டிருப்பதனால், தேவைக்கேற்ப அவைகளைக் கற்றுக் கொள்வதும், அவை சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பது மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளல் ஆகியனவும் சிறப்புக்குரிய அம்சங்களாகும்.

 

இவ்வாறாக, இங்கு சொல்லப் பட்ட மாற்றும் சொல்லப்படாத அரசியலுடன் சம்பத்தப்பட்ட அம்சங்களில் அறிவும் தேர்ச்சியும் பெற்றிருப்பது ஒருவரின் அரசியற்களப் பிரவேசம் சிறப்பாகவும், கச்சிதமாகவும் அமைவதற்கு துணை செய்வன என்பதில் மாற்றுக கருத்துக்கு இடமிருக்க முடியாது. 

 

கடைசியாக அரசியல் காளத்தில் ஒரு முஸ்லிம் நடந்து கொள்ளக் கூடிய சில வழிமுறைகளும் முக்கியத்துவம் கருதி முன்மொழியப் படுகிறது. அரசியல் களத்திலே அவ்வப்போது தனக்கும் தன்னுடன் கூட இருப்பவர்களுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கான சில கோஷங்கள் தேவைப்படும். அத்தகைய ஒரு கோஷமாக "யா ஹுசைன்" என்பதை பயன் படுத்தலாம். இது நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அரசியல் கதாநாயகன் எனும் அம்சத்துடன் தொடர்பு பட்டதாகும். “யா ஹுசைன்” எனும் கோஷம், ஹுசைன் (ரழி) அவர்களிடத்தில் உதவி கேட்பது அல்ல மாறாக, "ஹுசைனே உம் வழியைப் பின்பற்றி நாமும் உம்முடன் வந்துசேரத் தயாராகிவிட்டோம்" என்பதை குறிப்பதாகவே அமையும். அதேவேளை நடைமுறையில் காணப்படும் "தக்பீர்" சொல்லும் அமைப்பு பொருத்தமற்றது எனும் விடயம் வேறு ஒருசந்தர்ப்பத்தில் (“நான்” எனும் தலைப்பில்) தெளிவு படுத்தப்படுத்துள்ளது என்பது சந்தர்ப்பம் கருதி சுட்டிக் காட்டப்படுகிறது. "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மத் வ அலா ஆலி முஹம்மத்" எனும் ஸலவாத்துடன் "வாமன் தபிஅ ஹும்" என்பதையும் சேர்த்துக் கொள்வது அரசியல் போராட்டத்துக்கு உத்வேகம் தரும் இன்னோர் கோஷமாகக் கொள்ளலாம். இத்தகைய அம்சங்களின் தாத்பரியங்கள் விளக்கப் பாடுவது விரிவு கருதி இங்கு தவிர்த்துக் கொல்லப் படுகிறது. அதன் உள்ளர்த்தமாவது, "ஹுசைன் (றழி) அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றி அரசியல் போராட்டத்தில் ஈடுபடுகின்ற எங்கள் மீதும் அல்லாஹ் அருள் பொழியட்டும் என்பதாகும்.  

 

அடுத்து அரசியல் ஆடுகளப் பிரவேசத்தை விரும்புகின்ற ஒருவர் கவனிக்கத்தக்க அம்சம் தனது குணாதிசயங்கள் பற்றியதாகும். அரசியல் ஆடுகளம் ஏனைய ஆடுகளங்களை விடவும் கடினமான ஒரு அம்சம் ஆதலால் அதற்கேற்ப தன்னைத் தயாரித்துக் கொள்ளலும் அரசியற்களப் பிரவேசத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. எடுத்ததற்கெல்லாம் கோபப் படக்கூடிய முன்கோபக் காரர்கள் சிலபோது திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால் அத்தகையவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அரசியல் களத்துக்கு வந்து விட்டால் “எதையும் தாங்கும் கழுதைகளாக” தங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே அரசியல் ஆடுகளத்தில் வெற்றியைப் பெற்றுத்தருவதாக அமையும். அவ்வாறு முடியாவிட்டால் ஆலோசகர் எனும் வட்டத்தில் தன்னை வரையறுத்துக் கொள்வது இன்னும் பலருக்கு வழிவிடுவதாகவும், அதனூடாக தனது அரசியல் இலக்கை அடைந்து கொள்வதாகவும் அமையும் என்பதைக் கருத்தில் கொள்வது சாலச்சிறந்ததாகும். 

 

அவ்வாறே அரசியல் ஆடுகளம் துரோகிகள் நிறைந்த இடமாதலால் ஏமாற்றப் படுவதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் வகையில் முன்காப்பு நடவடிக்கையாக பனைமரத்துக்கு கீழிருந்து பால்குடிப்பதை தவிர்த்துக்கொள்வது சிறப்பாகும். குறிப்பாக பொதுச்சொத்து விடயங்கள், லஞ்ச ஊழல் விடயங்கள், பெண்களுடன் தொடர்புபட்ட முறைகேடான நடத்தைகள் போன்ற பழிகளை வஞ்சகமாக குற்றம் சுமத்தி அரசியல் லாபம் தேடக் கூடியவர்களிடத்தில் தோற்றுப் போகாமல் தான்னை முன்காத்துக் கொள்ளும்விதத்தில் நடந்து கொள்வது தனது அரசியல் பயணம் சிறப்பாக அமைய துணைபுரியும் அம்சம் என்பதை கருத்தில் கொள்ளல் சிறப்பாகும். இதற்கு துணை புரியாக் கூடிய ஒரு விடயம் தனது ஆன்மீக ஈடுபாடாகும் என்பதால் இதுவிடயமாகவும் கவனம் செலுத்துவது சாலச் சிறந்ததாகும்.

 

இத்தகைய அம்சங்களை தன்னகத்தே பொருந்திய ஒரு அரசியல் வெற்றிவீரன் சமூகத்தில் தோற்றமளித்து சாதனைகள் பல சாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. அத்தகைய சாதனைகளில் முதற்பகுதி தனது நாட்டுக்கானதாகவும், இரண்டாம்பகுதி, குறிப்பிட்ட தனது சமூகத்துக்காகவும் அமையுமாறு தனது அரசியல் வியூகத்தை வகுத்துக் கொள்வதே பல்லின சமூகத்தில் வாழக்கூடிய ஒரு அரசியல் தலைவன் பின்பற்றக் கூடிய சிறந்த வழிமுறையாகும்.  

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...