Saturday, January 22, 2022

நாட்டின் மலர்கள்

மலர் என்றவுடன் முதற்கண் கருதப்படுவது அது நறுமங் கமளுவதாக இருக்கும். அடுத்து மனிதனின் சிறந்த பகுதியான தலையில் சூடி அழகு பார்க்கப் படும். ஓரு மனிதனை கெளரவப் படுத்த மாலையாக அணிவிக்கப் படும், மேலும் தெய்வங்களுக்கு பூஜை செய்வதற்கும் பயன்படுத்தப் படும், என்பனவாகும்

முஸ்லீம்கள் இந் நாட்டின் மலர்களா அல்லது ரணங்களா என ஒரு கருத்துக் கணிப்பீடு செய்தால் பதில் என்னவாக இருக்கும் என்பது நாம் கரிசனை செலுத்த வெண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

முஸ்லீம்களைப் பற்றி வர்ணிக்கின்ற அல்குர அவர்களைஉம்மதன் வசதாஎன்று சொல்கிறது (அல்குர்ஆன் 2:143). அதை நடு நிலையான சமூகம் என்று சிலர் விளங்கிக் கொள்வதுண்டு ஆனால் அரபியில்வசத்என்ற சொல் மிகச் சிறந்த என்ற கருத்திலும் பாவிக்கப் படுகிறது. அந்த சிறப்பு என்ற பட்டத்தை முஸ்லீம்கள் பெற்றவர்களாக உள்ளனரா?

ஒரு பெண் அழகில்லாமல் பிறந்தது அவள் செய்த பிழை அல்ல. மாறாக அந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடிய மார்க்க அறிவும், பொது அறிவும் அவளிடத்தில் இருப்பதுவே அவசியமாகும். அதுபோலவே சிலர் கல்வித்திறமை இல்லாதவர்களாக இருப்பர், இன்னும் சிலர் பொருள் வசதி வாய்ப்புகள் இல்லாதிருப்பர். இன்னும் சிலர் சமூக அந்தஸ்தும் அரசியற் செல்வாக்குமில்லாதவர்களாக இருக்களாம். ஆனால் இவைகள் எல்லாம் குறைகள் அல்ல. மாறாக அவற்றை முகங்கொடுக்குமளவு அறிவில்லாமல் இருப்பதே பெருங்குறையாகும். அறிவு என்பது மனித அங்கங்களை ஒத்த ஒறு அம்சமாகும். அதைப் பிரித்து மனிதனை மனிதனாகக் காண முடியாது.

முஸ்லீம்களின் ஒறே குறை நவீன உலகியற் கள்விகளில் பின் தங்கி இருப்பதேயாகும். எனவே அவர்களின் கள்வித்தரத்தை உயர்த்தினால் எல்லாம் சரிப்பட்டுவிடும் என சில சீர்த்திருத்த வியூகங்கள் வகுக்கப் படுவதூண்டு. ஆனால் முஸ்லீமல்லாதவர்கள் அதை விடவும் சிறந்த வியூகம் வகுத்தால் போட்டியில் முஸ்லீம்கள் தோற்றுப் போகவெண்டிய நிலையே வரும். எனவே அதுவும் ஒரு தீர்வேயல்லாமல் அது மாத்திரமே தீர்வு எனக் கொள்ள முடியாது.

அதே வேளை அப்படியொறு முயற்சி இஸ்லாத்தின் போதனைகளுக்கும் ஒவ்வாததாகும் என்பதும் கருத்திற்கொள்ளப் படவேண்டும். குருடனோ செவிடனோ, ஊமையோ, திறமையானவனோ, இல்லாதவனோ, பணக்காரணோ ஏழையோ, யாரும் சிறந்த பண்புகள் படைத்தவனாக உறுவாவதற்கு வியூகம் வகுக்கப் படவெண்டும். எந்த ஒரு துறை சார்ந்த மனிதனாக இருந்தாலும் நல்ல என்ற அடைமொழியுடன் அழைக்கப் படும் நிலை உருவாக வேண்டும். அவன் நல்ல தொழிலாளி. இவன் நல்ல கடைக்காரன். அவன் சிறந்த வியாபாரி, இவன் சிறந்த ஒரு வைத்தியன் என்றவாறு தத்தமது தொழிற் துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கின்ற அதே வேலை; அங்கங்கே இஸ்லாத்தின் போதனைகளை உயிர்ப்பிப்பவனாக அவன் வாழவேண்டும். அதுவே நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துக்களை ஹயாத்தாக்குவதாக (உயிர்ப்பிப்பதாக) அமையும். “சுன்னாஎன்பது நபி (ஸல்) அவர்களின் சகல வாழ்க்கையையும் உள்ளடக்கியதாகும். குர்ஆன் வேறு சுன்னா வேறு எனப் பிரித்து நோக்க முடியாது. எனவே சுன்னா என்பதில் இஸ்லாத்தின் சகல போதனைகளும் உள்ளடக்கப் பட்டதாகக் கொள்ளப் படவேண்டும்.   

இந்தநல்லஎன்ற பட்டம் மாத்திரமே இந் நாட்டு முஸ்லீம்களுக்கு மலர்கள் எனும் அந்தஸ்தைப் பெற்றுத்தரும். அதற்கு கடும் முயாற்சி அவசியமாகும். ஒரு மனிதன் சூரியன் எழுமுன்னர் எழுந்திருப்பதே இந்த முயற்சியின் முதற்கட்டமாகும். படித்தவன் படிக்காதவன், ஏழை பணக்காரன், தொழில் செய்பவன் செய்யாதவன், சுகதேகி நோயாளி, பெரிவர் சிறியவன் என எல்லோரும் காலை ஐந்து மணியுடன் எழுந்துவிடும் நிலை உருவாக வேண்டும். அதுவே சோம்பலை முறித்து மனிதனை முயற்சியுடவனாக்கும் அரு மருந்தாகும்.   

அதுபோலவே, இந் நாட்டில் குழுமம் குழுமங்களாக வாழும் முஸ்லீம்கள் ஏனய பிரதெசங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிறப்பானவைகளாகத் தென்பட வேண்டும். இஸ்லாம் முஸ்லீம்களின் கலாச்சாரமாக மிளிர வேண்டு. சுபஹுத்தொழுகை வேளை முஸ்லீம்கிராமங்கள் யாவும் விழித்துக் கொள்ளும்  நேரமாக மாற வேண்டும்.  அரச கருமங்களாக இருந்தாலென்ன வியாபார நடவடிக்கைகளாக இருந்தாலென்ன முதல் பந்தியில் நிற்கக் கூடியவர்கள் முஸ்லீம்களாவே இருக்க வேண்டும் (பார்க்க அபூதாவூத் 2606). அவ்வாரே முஸ்லீம்கள் வாழும் கிராமங்கள் பரிசுத்தமானவைகளாகவும் மனங் கமளுபவைகளாகவும் மாற வேண்டும் (பார்க்க முஸ்லிம்:653).    

இப்படியாக இஸ்லாம் முஸ்லீம்களின் கலாச்சார்மாக மாறாத பட்சத்தில் இந் நாட்டின் வழங்களை மத்திரம் உரிஞ்சி வாழும் ரணங்களாகவேமுஸ்லீம்கள் கருதப் படுவது தவிர்க முடியாததாகி விடும் (பார்க்க அல்குர்ஆன் 2:85). இதுகால வரையிலும் ஆங்காங்கே சிலர் இஸ்லாத்தை தமது கலாச்சாரமாக பிரதிபலிக்கக் கூடியவர்களாக இருப்பதே இன்றும் கூட முஸ்லீம்களுக்கு அப்படியொரு பட்டம் ஏற்படத் தடையாக இருக்கின்றதே அன்றி வேறு எந்த காரணத்தையும் யாராலும் முன்வைக்க முடியாது.

ஒரு மனிதன் தனது உடலிலுள்ள ரணத்தைக் குணப் படுத்தப் பாடுபடுவான். ஆனால் ஒரு சமூகத்தின் ரணங்களாக இணங்காணப் பட்டாலோ அது நீக்கப் படுவதற்கான முயற்சிகளே அதிகம் நடைபெரும். இந் நிலை உருவான பின்னர் அதை மாற்ற முயற்சிப்பது எந்தவகையிலும் பயன் தருவதாக அமையாது. எனவே அந் நிலை உருவாவதற்கு முன்னர் நாம் சிந்தித்து செயலாற்ற கடமைப் பட்டுள்ளோம்.

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் நான் ஒரு சிறந்த முஸ்லிமாக வாழ்வேன் என திடசங்கட்பம்பூளவேண்டும். அதக்கான முயற்சியில் நான் இறந்தாலும் சரியே எனும் மனோ உறுதி வரவேண்டும். போராட்டம் மாத்திரம் முஸ்லீம்களின் அணிகலன் என்ற்றில்லாமல் பண்பாடும் சிறந்த கலாச்சாரமும் முஸ்லீம்களின் அணிகலங்களாக மாற வேண்டும். இந் நன்னோக்கத்திற்காக எதுவெல்லாம் சாதகமான, சாத்தியமான வழிமுறைகளாக உள்ளனவோ அவைகள் பற்றி சிந்தித்து செயல்படுவோமாக. அதுவே வெள்ளம் வருமுன் அணை கட்டுவதாக அமையும். அல்லாஹ்வே நன்கறிந்தவனாவான்.

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...