Saturday, January 22, 2022

 பத்துவா,,,,,, - (மார்க்க சட்ட விளக்கம்)

 ஒரு மனிதன் மேடையிலே டாக்டர் போன்று சிறப்பாக நடிக்கிறான் என்பதற்காக நாம் அவனிடத்திலே போய் நோய்க்கு மருந்து பெற்றுக் கொள்ளமாட்டோம். இன்னொருவன் திரையிலே எஞ்சினியராக நடித்தான் என்பதற்காக அவனிடத்திலே எமது வீட்டிற்கான வரைபடத்தை செய்து தருமாரு கேட்க மாட்டோம். அதுபோலத் தான் ஒரு மனிதன் சிறந்த ஆலிம் போன்று வேடம் போட்டிருப்பதற்காக அவனிடத்தில் போய் பத்துவா கேட்பதுமாகும்.

 

பத்துவாவைப்பற்றி சுருக்காமாகச் சொல்வெதென்றால், அது ஒரு நெருப்பு, அதிலே கைவைப்பது கேட்டு தின்னக் கூடிய பருப்பு.

 

அல்லாஹ் ஹராமாக்கிய தொன்றை ஒருவன் ஹலால் எனச் சொல்வதும், அல்லாஹ் ஹராம் எனச் சொன்னதை ஒருவன் ஹலால் எனச் சொல்வதும் இனைவப்பது (ஷிர்க்) என்பதையும், இறை மறுப்பு (குப்ர்) என்பதையும் தாண்டிய மிகப் பெறிய குற்றமாகும். அவ்வாறு செய்கின்றவன் இறைவனுக்கு நிகராக தன்னை ஒரு குட்டி இறைவனாக ஆக்கிக் கொண்டுள்ளான் என்பதுவே உண்மையாகும். (அல்-குர்ஆன் 9:31 ஆம் வசனத்துக்கான விளக்கவுரையில் இந்த விடயம் விரிவாக விளக்கப் படுகிறது)

 

ஒரு மனிதன் தனது வாழ்கையில் பல பாவ காரியங்களைச் செய்யலாம், கொலைகூட பண்ணியிருக்கலாம் அவற்றுக் கெல்லாம் அல்லாஹ்விடத்தில் முறையாக பாவமன்னிப்புக் கேட்டால் அவனுக்கு மன்னிப்பு உண்டு. அதற்கு ஒரு காரணம் அவன் அறியாமையினால் அவற்றைச் செய்திருப்பான் என்பதாகும். ஆனால் அல்லாஹ் ஹலால் எனச் சொன்னதொன்றை ஒருவன் ஹராம் எனச்சொல்வது அவன் நன்றாக படித்துத் தெளிந்து ஆதாரங்களை முன்வத்து செய்யும் செயலாகும். அது அறியமையினால் செய்த தவறு என்பதை விடவும் அகம்பாவத்தினால் செய்த குற்றம் என்று சொல்வதே பொருத்தமாகும். அகம்பாவம் பெருமையின் ஒரு வகை. அதனால் தான் கடுகளவேனும் உள்ளத்தில் பெருமை உள்ளவன் சுவர்க்கம் நுலைய மாட்டான் என பல்வேறு நபிப் போதனைகள் சொல்லுகின்றன.

 

பத்துவாஎன்பது அவ்வளவு பாரதூரமான விடயம் என்பதனால்தான், அதிகமான பிக்ஹ் புத்தகங்களில், நாம் இமாம்கள் எனச் சொல்லக் கூடிய பெரும் அறிஞர்களும் அவர்களின் மானவர்களும், எந்த ஒரு சிக்கலான விடத்தைப் பற்றியும் தீர்வு முன்வைக்கும் போதும் மிகப் பக்குவமாஅல்லஹ்வே நன்கறிந்தவன்என்ற வாசகத்தை கடைசியாக குறிப்பிட்டிருப்பார்கள்.

 

ஆனால் இன்று மார்க்கத்தை படித்தவர்களின் நிலை எப்படியென்றால், படிக்கின்ற காலத்திலெல்லாம் கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு (பரீட்சையிலும் கூட) அல்லாஹ்வும் அவனது தூதருமே நன் கறிந்தவர்கள் எனப் பதிலளிப்பார்கள். படித்து முடிந்ததும் தானக்கு எல்லாம் தெரியும். தான் சொல்வெதெல்லாம் சரியானவையே, அதிலே பிழைகள் எதுவுமே இல்லை என்ற அமைப்பிலே கருத்துக்களையும்பத்துவாக்களையும்சொல்லுவார்கள். (ஆனால் சரியான அமைப்பு, இது மறுபக்கமாக அமைந்திருக்க வேண்டும்).

 

ஒருவன் சுயமாக முயன்று, மார்க்க விடயத்தில் ஒரு தீர்வு (பத்துவா) சொல்வதென்றால் குறைத்த பட்சம் அவனிடத்திலே கீழ்வரும் தகமைகள் இருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஒருவர் விளக்கமோ, தீர்ப்போ சொல்லவது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடைப்பட்ட விடயமாகும். அதிலே நாம் எந்தவகையிலும் குருக்கிட்டு அவரை தடுக்க முடியாது.

   

1.   பொழித்தேர்சிஅரபு பொழியில் சிறந்த பாண்டித்தியம் இருக்க வேண்டும். அல்குர் ஆன், மற்றும் ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள வற்றுடன், ஜாஹிலிய்யாக் கால கவிதைகள் உட்பட அதிமான அரபு இலக்கியங்களை வாசித்தறிந்திருக்க வேண்டு. சஹாபாக்களும், பின்னர் வனந்த இமாம்களும் இவற்றை எல்லாம் மனப் பாடம் செய்து வைத்திருந்தார்கள்.

 

2.   அரபு இலக்கண்த்தில் சிறந்த பாண்டித்தியம் இருக்க வேண்டும். அரபு இலக்கணத்தில் இரண்டு வைகை உண்டு. 1. “நஹ்வு வஸ் சர்ப்என்பது சாதாரண இலக்கணம். 2. “பலாக்ஹாஎன்பது இலக்கிய அமைப்பிலான அரபு இலக்கணம். இவை இரண்டையும் தெளிவாகக் கற்றிருக்க வேண்டும்.

 

3.   தப்ஸீர்உம் உலூமுல் குர்ஆன் கலையும்அல் குர்ஆன் விளக்க நூல்கள் மூன்றையாவது முழுமையாகப் படித்திருப்பதுடன்உலூமுல் குர்ஆன் எனும் கலையில் தேர்ச்சி பெற்றிருத்தல்.

 

4.   ஷரஹ்” – ஹதீஸ் விளக்க நூல்கள்- புஹாரி கிரந்தத்திற்கு மாத்திரம் 50 ஷரஹ் கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாம் தெரிந்து வைத்திருக்கின்ற முக்கிய 6 கிரந்தங்களைவிடவும்முவத்தா மாலிக்”, “பைஹகி”, “தபரானிபோன்ற இன்னும் பல கிரந்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கானஷரஹ்களை எண்ணிப் பார்த்தால் அவற்றை வாசித்திருப்பதை விடவும் தொட்டுப் பார்த்திருப்பது அவசியம் என நிபத்னையை தளர்த்திக் கொள்ளத் தோன்றும்.

 

5.   பிக்ஹ்நூல்கள்இமாம்கள் எனச் சொல்லக்கூடிய நாங்கு இமாம்கள் உட்படஇப்னு தைமியா”, “இப்னுல் கையூம்போன்ற மார்க்க அரிஞர்கள் கூறிய சட்டவிளக்கங்கள் உள்ளடங்கிய நூல்கள் பல இருக்கின்றன. அவைகளை வாசித்தறிந்திருக்க வேண்டும்.

 

6.   உஸுலுத் தக்ரீஜ்” – அது ஒரு ஹதீஸ் எப்படிசஹீஹ்”, “ழ்ஈப்என வகைப் படுத்தப் படுகிறது என விளக்கும் கலை. அதிலேஅஸ்மாஉல் ரிஜால்என ஹதீஸை அறிவிக்கின்றராவீக்கள்ஐப் பற்றிய வரலாற்றை உள்ளடக்கிய பல புத்தகங்கள் உள்ளன.

 

7.   உஸூலுல் பிக்ஹ்” – இது பிக்ஹ் கலையின் சட்ட மூலாதாரங்களை விளக்கும் கலை. விஞ்ஞானத்திலும், கணிதத்திலும் இருக்கின்ற பல்வேறு விதிகள் மற்றும் சமன்பாடுகளை ஒத்த சட்ட விதிலைளை விலக்குகின்ற கலையே இதுவாகும். இவை பற்றி, நாங்கு இமம்கள் உட்பட இன்னும் பல அறிஞ்ஞர்கள் எழுதிய புத்தகங்கள் உள்ளன.

 

8.   சம்பத்தப் பட்ட விடயம் சார்ந்த, கல்வி அறிவு: வியாபாரம்/ வணிகக் கல்வி, மருத்துவம், தாவரவியல், உளவியல் என மார்கத்தீர்ப்புடன் சம்பத்தப் பட்ட விடயத்துடனான அன்றயகால அறிவியல் கல்வி பற்றிய விடயங்களைத் தெரிந்து வைத்திருத்தல்.

 

9.   பெளதீக, சூழல் மற்றும் பிரதேச பழக்க வழக்கங்கள்: மேலே சொல்லப்பட்ட சட்டமூலாதாரங்களில் இது உள்ளடக்கப் பட்ட ஒரு விடயம். ஆனாலும் முக்க்யத்துவம் கருதி தனியாக குறிப்பிடப்படுகிறது.

 

10. இபாதத்தும், தக்வாவும்.: அல்லாஹ் இறக்கி அருளி காட்டித்தந்த மார்க்கத்தை தன்னால் இயன்றளவு பின்பற்றக் கூடியவராக இருக்க வேண்டு.

இல்ஹாம் என்ற ஒன்று இருப்பதாக தெளிவான சான்றுகள் உள்ளன. எனவே ஒரு மனிதன் சிக்கலான விடயங்களில் இந்த இல்ஹாமின் அடைப்படையிலேயே சரியான தெளிவைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவன் அல்லாஹ்வுக்கும் தனக்கும் இடையில் நெருக்கமான உறவை பேணிக்கொண்டாலேயே அந்தா இல்ஹாம் எனும் அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும். (பார்க்க அல்குர் ஆன் 2:255)

 

இத்துனை அம்சங்களிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர் ஒரு மார்க்க விடயத்தில் சுயமாக முயன்று ஒரு தீர்ப்பை முன்வைக்கும் போது அவர்முஜ்தஹித்என அழைக்கப் படுகிறார். அவரப் பின்பற்றி அவரின் பத்வாக்களை மற்றவர்களுக்கு சொல்கின்றவர்முதகல்லித்என அழைக்கப் படுகிறார். இந்த இரண்டு வகையினரில் இன்றுபத்துவாசொல்லக் கூடியவர்களை எந்தப் பகுதியில் சேர்த்துக் கொள்ளலாம் எனப் பார்த்தால்…? மூன்றாம், நான்காம் வகையினரான, “முதகப்பிர்”, “ழால்லுன் முழில்பகுதியினரில் தான் சேர்த்துக் கொள்ள முடியும் என்பதாகத் தான் தோன்றும்.  

 

இன்றய முஸ்லீம் சமூகத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்திய, நாம் போற்றக் கூடிய அறிஞ்ஞர்களான, மெளலானா இல்லியாஸ், மெளலானா மெளதூதி, ஷெ. ஹஸனுல் பன்னா, ஷெ. முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (றஹ்மதுல்லாஹி அலைஹிம்) அனைவருமே பத்துவா விடத்தில் மிகப்பக்குவமாக நடந்துகொண்டவர்களே. தங்களுக்கு முன்னர் வாழ்ந்த இமாம்களுக்கு மாற்றமாக இவர்கள் எந்த பத்துவாவைச் சொல்லியுள்ளார்கள் எனத் தேடிப்பார்த்தால் எதுவுமே கிடைக்கமாட்டாது.

 

எனவே யாரும் மார்க சட்ட பிரச்சினை விடயத்தில் சம்பத்தப் படும் பொழுது ஒரு ஆலிமின் பெயரை முன்னாலோ பின்னாலொ போட்டுக் கொள்வதுதான் தற்காப்பும் புத்திசாலித்தானமுமாகும், இல்லாவிட்டால் மாட்டிக்கொண்டதன் பின்னர் தான் அருமை புரியும் அதற்குப் பின்னர் மாற்றிக் கொள்ள வழியே கிடைக்க மாட்டாதுவிளங்கிங்கிக் கொண்டால் சரி….

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...