Saturday, January 22, 2022

 ரொட்டி வியாபாரி - 2

ரொட்டி வியாபாரி தேங்காய் திருவுவதை மாத்திரம் பார்த்து விட்ட அவனை விட தான்னால் சிறப்பாகத் தேங்காய் திருவ முடியும் என்று எண்ணிய அந்த தேங்காய் திருவி திருவிய தேங்காய் யாருக்கும் பயணளிக்க வில்லை. அடுத்தானாலான போது அது கெட்டு தூர்வாடை அடிக்க ஆரம்பித்தது.

இதுபோலத்தான் ஒருவிடயத்தில் அல்லாஹ்வின் கட்டளைகளையும் அவனது தூதரின் வழிகாட்டல்களையும் சரிவரத்தெரிந்து கொள்ளமல் செய்யப் படும் செயல்களும் அமைந்து விடும் (பார்க்க அல்குர்ஆன் 2:,,)  

அப்படியில்லாமல் இஸ்லாத்தின் போதனைகளை நங்கு விளங்கை செயற்படுகின்ற ஒருவனிடத்தில் பல்வேறு முக்கிய பண்புகள் காணப்படும்.

முதலாவதாக இஸ்லாத்தைப் பற்றிய கல்வி.

கண் தெரியாத ஒரு குருடருக்கு பொதுவாக மக்கள் மத்தியில் மதிப்பு குறைவு. ஆனால் அல்குர்ஆன் ஒரு கண்தெரியாத குருடரை மிகவும் உயர்த்திப் பேசுகிறது. அதற்குக் காரணம் அவர் இஸ்லாத்தை தேடிவந்தவர் என்ற ஒரே காரணமாகும் (பார்க்க அல்குர்ஆன் 1:3). அதுபோலத்தான் அறிவைத் தேடுவதைப் போதிக்கின்ற ஹதீஸ்கள் எல்லாம் எல்லாருக்கும் பொதுவானவையே அல்லாமல் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மாத்திரம் என்று கூறி விட முடியாது. ஒரு ஆலிம் மதிக்கப் படவேண்டியது அவனின் தோற்றத்துக்காகவோ அல்லது அவனிடத்திலிருக்கும் பொருளுக்காகவோ அல்ல மாறாக அவன் சேர்த்து வைத்திருக்கும் அறிவுக்காகவாகும் அதனை சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்ப பிரயோகிக்கக் கூடிய அவனது திறமைக்காகவுமாகும்.

இஸ்லாத்தை பரிபூரணமாகப் பின்பற்றுகின்றவன் திடகாத்திரமாகவும், துனிவுடனும் இருப்பான். அல்லாஹ்வின் தூரர் (ஸல்) எவ்வளவு திடகாத்திரமானவராகவும் துணிவுள்ளவர்களாகவும் இருந்தார் மாத்திரமன்றி பார்ப்பதற்கு மிகவும் அழகிய தோற்றமுடயவராகவும் இருந்தார் என்பதை ஆதார பூர்வமான ஹதீஸ்களில் கண்டு கொள்ளலாம். தனது அறுபதாம் வயதில் கடிவாளமில்லாமல் வேகமாக குதிரையில் பயனிக்கக் கூடிய ஆற்றல் உள்ளவராகவும், அபீசீனியா, ஷாம், பாரசீகம் போன்ற பல்வேறு பிரதேசத்துக்குறிய ஆடைகளயும் அணிந்து மிகவும் அழகிய தோற்றத்துடன் இருப்பார்கள் என்பதாகவும் வாசனைத் திரவியங்களைப் பயன் படுத்தக் கூடியவர்களாகவும் இருந்தார்கள் என்பதை நாம் ஆதார பூர்வமான ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.


ஒரு கேள்வி வரலாம். தான்னால் முழுமையாகக் கற்றுக் கொள்ளத்  தெரியாதவன் என்ன செய்வதென்று. அத்தகையவர்கள் ஒரு சிறந்த ஆலிமை நாடிச் சென்று அவர் சொன்ன பிரகாரம் நடந்து கொள்வதாகும். ஆலிம் சொல்லிக் கொடுத்தது பிழையாக இருந்தால் அது ஆலிமுக்குத்தான்,

ஒருவன் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவதாக இருந்தால் அவன் கீழ்வரும் விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...