Saturday, January 22, 2022

 மனித அவலம்

உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதம்” (2:25) என்று நாம் அல்குர்ஆனினூடாக அறிந்து கொள்ள முடியுமாக இருந்தாலும் அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை அறிவியற் சான்றுகளினூடாகவே அறிந்து கொள்ள முடிகிறது. அந்த அறிவியற் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, வீடு கட்டத் தெரியாமல், கற்குகைகளில் வாழ்ந்த ஆரம்பகால மனிதன் கற்களையே ஆயுதமாகப் பயன் படுத்தி வாழ்ந்தான். அவனுக்கு இன்று போல் ஆடை அணியத் தெரிவில்லை, உபகரணங்களைப் பயன் படுத்தத் தெரிவில்லை, அறிவு ஞானங்கள் தெரியாது,  நோயுற்றால் குணப் படுத்திக் கொள்ளத் தெரியாது, அவனை எதிர்த்து வருகின்ற மிருகங்களை எதிர்கொள்ளத் தெரியாது. இப்படி வாழ்ந்த மனிதன் இன்று நாம் காணுகின்ற நாகரிக முன்னேற்றம் கண்டு சிறப்பாக வாழ்கிறான். கிரகம் விட்டு கிரகம் சென்று ஆய்வுகள் மேற்கொள்கிறான். என்றாலும் கூட மனித சமூகத்தின் அவலங்கள் மாத்திரம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

மனித அவளங்களில் முதல்தர அவலமாக திருமன கலாச்சாரத்தைக் கூறலாம். திருமனம் முடிக்க எல்லாத் தகுதிகள் இருந்தும் திருமன முடிக்காமல் இருக்கும் யுவதிகளின் அவலம் ஒரு ஊமை அவலமாகும். அதை அனுபவிக்கின்றவர்களுக்கு மாத்திரமே அதன் வருத்தம் தெரியும். அது மாத்திரமன்றி நியாயப் படுத்தமுடியாத எந்தக் காரணமுமின்றி ஏற்பட்டிருக்கும் அவலமே அதுவாகும். இந்த அவலத்தினால் இன்னும் பல அவலங்கள் அரங்கேரிக் கொண்டிருப்பதை சிந்தித்துணரக்கூடியவர்கள் நிச்சயம் கண்டு கொள்வர். பெற்றவர்களின் கவலை, குழந்தைகளின் வாழ்வு பாள்படல், நடத்தைச் சீரழிவுகள், குடும்பங்கள் பிரிதல், வருமை, போதைவஸ்துப் பரவல், தற்கொலை, கொலை எனப் பலப்பல அவலங்கள் அரங்கேர ஒரு பின்புலக் காரணமாக இது இருக்கிறது. இரண்டு கைகள் இரண்டு கால்கள் என்று மனிதனைப் படைத்த இறைவன் உலகின் சனத்தொகையில் முக்கால் வாசிப் பகுதியை பெண்களாகவும் கால்வாசியையே ஆண்களாகவும் படைத்துள்ளான். இந்த வித்தியாசத்தை சமப் படுத்தி எல்லா பெண்களும் திருமனம் முடித்து வாழ்வது சாத்தியமாக வேண்டுமென்றால் ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமனம் முடித்தே ஆகவேண்டும். இந்த யதார்த்தத்தை மறந்து பெண்கள் திருமன முடிப்பது என்ற பிரச்சிணைக்கு ஒருபோதும் தீர்வு காணவே முடியாது. அதுபோலவே பெண்கள் திருமனமுடிக்காமல் இருப்பதற்கான துணைக்காரணிகளாக, பெண்களின் பெற்றோர்களின் அதீத எதிர்ப்பார்ப்புகளும், பெண்களின் சுயஎதிர்ப்பார்ப்புகளும் அமைந்திருப்பதைக் கொள்ளலாம். இந்த காரணிகளே திருமன முறிவுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது. அத்துடன் இலங்கை முஸ்லீம் சமூகத்தில் திருமன முறிவுக்கு காரணமாக இருப்பவர்களாக முஸ்லீம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் நியமிக்கப் பட்டுள்ள தகுதியில்லாக் (கல்வித்தகைமைகள் இல்லாத) காழியார்களையும் குறிப்பிடலாம்.  

அடுத்து மனித சமூகம் முகங்கொடுக்கும் அவலமாக பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்டுள்ள பெண்களின் அவலத்தைக் கூறலாம். சிறப்பாக வாழ்வதற்கு எல்லாத் தகுதிகள் இருந்தும், இந்தப் பெண்கள் போலியான தகவல்களின் அடிப்படையில் கடத்தப்பட்டும், வேறுகாரணிகளினால் ஏமாற்றப்பட்டும், ஒரு சில மனிதர்களின் சுய லாபங்களுக்காக மனமுறண்டாக விபச்சாரத் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். நாம் விபச் சாரச் சந்தையை சற்று உற்று நோக்கிப் பார்த்தால் அங்கே ஆண்களின் துணையுடனேயே அது அரங்கேற்றப் படுவதைக் கண்டு கொள்ளலாம். எனவே பெண்கள் இப்படியொரு தொழிலில் சுயமாக ஈடுபடாமல் புறக்காரணிகளின் நிர்ப்பந்தத்தினாலேயே ஈடுபடுகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். இந்த ஆட்கடத்தல், ஏமாற்றப் படல், உழைப்புக்கு வேறு வழியின்மை, மற்றும் வாழ்க்கையில் மேடுபல்லங்களுக்கு முகம்கொடுக்கும் போதி அறிவின்மை போன்ற விடயங்களைக் கட்டுப் படுத்துகின்ற அதேவேளை, பெண்கள் பாதுகாப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அதில் அடைக்கலம் புகும் பெண்களைப் போஷிக்கும் நடைமுறை அறிமுகப் படுத்தப் படவேண்டியதொரு தேவை இருக்கிறது.

மனித சமூகம் முகங்கொடுக்கும் அடுத்த அவலமாக பிறப்பினால் குறைபாடுடயவர்களாக இருப்பவர்களும், விபத்து மற்றும்  நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளவர்களையும் கூறலாம். இத்தகையவர்கள் பார்ப்பார் கேட்பாரின்றி தெருவில் கைவிடப் பட்டிருப்பது ஒருபுறம், இத்தகையவர்களைக் காட்டி பிச்சைவாங்கிப் பிழைக்கும் கூட்டம் இன்னொரு புறம். ஒரு குருடன், ஒரு ஊமை, ஒரு சப்பானி என்பவன் பாவமே செய்யாத மனிதப் புனிதன். தமது நம்பிக்கைகள், கற்பனைகள் என்பவற்றை மையமாக வைத்து, சிலைகளுக்கும், மிருகங்களுக்கும் பூஜை செய்து வாழ்வில் வசந்தததை எதிர்ப்பார்க்கின்ற மனித சமூகம் இந்த உயிருள்ள ஜீவன்களுக்கு சேவை செய்வதன் மூலம் தமது வாழ்வில் வளம்பெற எதிர்ப்பார்ப்பது எவ்வளவு சிறந்ததாக இருக்கும்! இத்தைகைய எல்லா வகையான இயற்கை மற்றும் செயற்கை உபாதைகளுக்கு உட்பட்டு; உடல், உள ரீதியாக பாதிக்கப் பட்ட எல்லாவகையினரும் குறையின்றிப் பராமரிக்கப் படுவதற்கான பராமரிப்பு நிலையங்கள் உருவாக்கப் படுவது அவசியமாகும்.

அடுத்த மனித அவலமாக சுயமுயற்சி உள்ளவர்களாக முன்னேர வழிதேடிக்கொண்டிருக்கும் வரியவர்களின் அவலத்தைக் கூறலாம். “மாடிவீடு யன்னல் கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப் பொண்ணு அம்மனமாயிருக்குஎன்று ஒரு கவிஞனின் வரிகள் வர்ணிப்பது போல செல்வம் குவிந்து கிடக்கின்றவர்கள் அதை அனாவசியமாக செலவு செய்வதும்,  ஏளைகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதும் யதார்த்தமாகப் போய்விட்டது. படிப்பினால் வந்த செல்வமாக இருக்கலாம் அல்லது பரம்பரையாக வந்த செல்வமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அது மழைக்கு ஒப்பானதாகும். மேட்டு நிலத்தில் பெய்யும் மழை நீரை தாழ் நிலத்தை நோக்கி ஓடாமல் தடுத்துக் கொண்டால் என்னவாகும்? ஒன்றில் மேட்டு நிலம் சரிந்து விழும் அல்லது அந்த நீர் தேங்கி நின்று அசுத்தமாகிவிடும். இதைத்தான் இன்றய சமூகத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம். இறைவனால் தனக்கு அருளப்பட்ட அந்த செல்வத்தை தான் அதிகம் அனுபவிக்க வேண்டும் என்ற நினப்புடன் சேர்துவைக்கும் போது ஒன்றில் தனது குடும்பத்துக் குள்ளேயே குழப்பங்கள் ஏற்பட்டு சீரழிவுகள் ஏற்படக் காரணமாகிறது, அல்லது களவு போதல், இயற்கை மற்றும் செயற்கை அழிவுகளுக்குட்படல், நோய்வாய்ப்படல் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் அந்த செல்வம் சீரழிந்து போவதையும் நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். அவ்வாரில்லாமல் எவ்வாறு மழை நீர் தாழ் நிலங்கை நோக்கிப் பாய்ந்து சென்று அங்கே பயிர் பச்சை வளர்ந்து எல்லாரும் பயன் பெற துணை செய்கிறதோ அதுபோல் செல்வந்தர்களின் செல்வங்கள், வரியவர்களின் நலனுக்காகவும் செலவு செய்யப் படவேண்டும். அதே வேளை எவ்வாறு ஒரு அறிவாளிக்கு அல்லாஹ் கொடுத்த அறிவைக் கொண்டு அவன் சுவர்க்கம் செல்ல எண்ண வேண்டுமோ அதுபோலவே ஒரு செல்வந்தனுக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்தைக் கொண்டு அவன் சுவர்க்கம் செல்ல எண்ண வேண்டும் (பார்க்க அல்குர்ஆன் 28:77). மற்றெல்லா அம்சங்களும் இரண்டாம் பட்சமே. எனவே ஒரு செல்வந்தன் தனக்காகவும் தனது குடும்பத்துக்காகவும் செலவழிப்பதில் நிதானம் தவறாது நடந்து கொள்வதன் மூலம் தனது செல்வம் வீன்விரயமாவதைத் தவிர்த்து, அதைப் பிறருக்கு கொடுத்து இறை திருப்ப்தியைப் பெறுவது மாத்திரமே அவனது இம்மை மருமை வாழ்வை செழிப்பாக்கும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயற்படக் கூடிய புத்திசாலியாக வாழப் பழகவேண்டும்.  

மேற்சொன்ன மனித அவலங்கள் இல்லாமல்போக, மனித திறமையும், முயற்சி, செல்வம் என்பன அவசியமாகும். எனவே யாருக்கெல்லாம் காலநேரமும் திறமையும் இருக்கிறதோ அதை அவர்கள் இதற்காகச் செலவிட முன்வரமேண்டும். அதுபோலவே பணம் படைத்த செல்வந்தர்கள் அத்தியவசியமில்லா செலவீனங்களைக் குறைத்து இந்த அவலங்களை நீக்க அவற்றைச் செலவு செய்ய முன்வரவேண்டும்.

இதுவே எனது தேர்தல் விஞ்ஞாபனமாகும். நான் தேர்தலில் வெற்றி பெற்றால்  நிச்சயம் இந்த அவலங்கள் அனைத்தையும் இல்லாதொழிக்கப் பாடுபடுவேன். இந்த அவலமொழிப்புத் திட்டம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை தவறாது எனக்குத் தந்துதவுங்கள்.  

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...