Saturday, January 22, 2022

 பகலுணவு

வெளியூருக்கு ஒரு தேவை நிமித்தம் சென்றிருந்த ஒருவன், பகல் வேலையானபோது பகலுணவு கிடைக்கும் கடையொன்றைத் தேடுகிறான். அவனை சந்தித்த ஒரு பெரியவர் உணவு கிடைக்கும் கடை இருக்கும் இடத்திற்கு வழியை சொல்லிக் கொடுத்த பின்னர் அந்தக் கடையில்பார்சல்” (பொதி) சாப்பாடு மாத்திரமே கிடைக்கும் என்ற விடயத்தையும் கூறிச் சென்றார்.

பெரியவர் சொன்னவாறு சாப்பாட்டுக் கடை இருக்கும் இடத்திற்கு போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு பேப்பர் (பத்திரிகை) கடையைக் காண்கிறான். இப்பொழுது அவன் சிந்திக்கிறான். அந்த சாப்பாட்டுக் கடையில் பேப்பரால்தானே சாப்பாட்டை பொதி செய்கிறார்கள். எனவே இந்த பேப்பரையே நாம் சாப்பிட்டு பசியாரலாமே. ஏன் நாம் சிறமப்பட்டுக் கொண்டு அந்த சாப்பாட்டுக் கடையைத் தேடி அவ்வளவு தூரம் செல்ல வேண்டும். இவ்வாறு சிந்தித்த அவன் ஒரு கட்டு பேப்பரை வாங்கிக் கொள்கிறான்.

இன்று முஸ்லீம் சமூகத்திலுள்ள பலர் (எல்லா நாட்டிலும் வாழக்கூடிய) இஸ்லாத்தைப் பின்பற்றும் முறையும் இந்தப் பகலுணவு சாப்பிட்டவனின் செயலைப் போன்றதாகும். அல்குர்ஆன் வசனங்கள் ஓதப் படுவதை செவிமடுக்கின்றனர். ஆனால் அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவதில்லை. ஹதீஸ்கள் வாசிக்கப் படுகின்றன. ஆனால் அவற்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் முயற்சிப்பதில்லை. அவற்றை கேட்பதால் மாத்திரம் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.  

ஒரு தெளிவான விடயம் என்னவெனில் ஒருவன் ஒரு அல்குர்ஆன் வசனத்தை அல்லது, ஹதீஸை சரியாக விளங்கிக்கொண்டால், அவன் வாழ் நாள் முழுவதும் அல்குர்ஆனையும், ஹதீஸ்களையும் கற்கக் கூடியவனாக மாறி விடுவான். காராணம் ஹதீஸ்கள் ஒவ்வொன்றும் மற்ற ஹதீஸ்களுடன் தொடர்பு பட்டதாகவே இருக்கின்றது.  அல்குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஒன்று மற்றொன்றுடன் தொடர்பு பட்டனவக இருக்கின்றன. அதேவேளை, அல்குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களுடனும் தொடர்புபட்டனவாகவே இருக்கின்றன. இவற்றில் ஒன்றைச் சரியாக விளங்கும் போது அடுத்ததை விளங்க வேண்டிய தேவயை ஏற்படும். அடுத்ததைச் சரியாக விளங்கிக் கொள்ளும்போது மற்றொன்றை விளங்க வேண்டிய தேவை ஏற்படும். இவ்வாறு ஒருவன் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருந்தாலும் படித்து முடிக்க முடியாததே அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களுமாகும்.

ஆனால் அந்தப் பகலுணவு சாப்பிட்டவன் தான் போன வழியில் இன்னும் கொஞ்சம் தூரம் போக மனமில்லாமல் பேப்பரை திண்டு பசியார நினைத்ததைப் போல, அல்லது அதைவிடவும் கேவலமான அமைப்பிலேயே இன்று முஸ்லீம்கள் பலரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களூடாக இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளாமல் தமது உள்ளத்துக்கு சரியாகத் தென்பட்ட ஏதோ ஒன்றை இஸ்லாம் என எண்ணி அதன் படி தமது வாழ்வை அமைத்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று  நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.   

ஒரு அல்குர்ஆன் வசனத்தை கற்றுக் கொள்வதற்காக வெளியிரங்கிச் செல்வது நூறுரக்அத்துகள்தொழுவதை விடச் சிறந்ததாகும். ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றிக் கற்றுக் கொள்வது அதன்படி அமல் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆயிரம்ரக்அத்துகள்தொழுவதைவிட மேலானதாகும் (பார்க்க இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்: அபூதர் (றழி) அறிவிப்பதாக) என்று ஹதீஸ் கூறுகுறது. அந்தஇல்ம்ஐக் கற்பதே இபாதத் ஆக இருக்கும் போது சிலர் சொல்லக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால்அவரிடத்தில் இல்ம் இருக்கிறது ஆனால் இபாதத் இல்லைஎன்று.

இல்ம்உள்ளவரிடத்தில் குறைவாகத்தான் இபாதத் இருக்கும். ஆனால் அது மேலானதாக இருக்கும் என்ற விடயம் இன்னுமே பலருக்கு விளங்காமல்தான் இருக்கிறது. சோறு (பிரியாணி) சமைப்பது எவ்வாறு எனத்தெரியாத ஒருவன் பல அண்டா சோற்றை தான் விரும்பியவாரு நெருப்பில் வைத்து பின்னர் இறக்கி வைத்து விட்டு,  நான் புரியாணி சமைத்துள்ளேன், எல்லாரும் சாப்பிட வாருங்கள்என அழைத்தால் யார்தான் அவன் சமைத்த பிரியாணியைச் சாப்பிடப் போகிறார்கள்? சோறு சமைப்பதற்கே எவ்வளவோ அறிவு தேவைப் படுகிறது. அதனால்தான் ஒரு உரிலே சிலரே சிறப்பாக சமைக்கக் கூடியகோக்கிமார்களாக இருப்பர். ஆனால் அதை விடவும் பல மடங்கு சிறப்பு மிக்க இம்மையிலும் மறுமையிலும் பயன் தரத்தக்க இபாதத்களை (நற்கருமங்களை) சரியாகச் செய்வதற்கு எவ்வளவு அறிவு அவசியமாக இருக்கும் என்பது யாருக்கும் இலகுவாக விளங்கக் கூடிய விடயமாகும். அப்படியென்றால் ஏன் அந்த அறிவைக் கற்றுக் கொள்வதில் முனைப்பும் ஆற்வமுக் காட்டப் படுவதில்லை? (பேப்பரை திண்டு விட்டு பசியாறும் நினைப்பா………….?)

நாம் சஹாபாக்கள் காலத்தை விட்டு விடுவோம். அதற்கு பின்னர் வந்த அண்மைய காலத்தில் நம் நாட்டைப் போன்ற இடங்களில் ஒரு வழமை இருந்தது. அதாவது புகாரிக் கந்தூரி எனும் பெயரில் முழு புகாரி கிரந்தத்தையும் வாசித்து சாப்பாடு பகிரும் வழமையே அது. அந்த புகாரிக் கந்தூரியில் புகாரிக் கிரந்தம் அரபியில் வாசிக்கப் படுவதை கேட்கின்றவர்களுக்கு எதுவும் விளங்காவிட்டாலும் கூட வாசிக்கக் கூடியவர்களுக்கு மாத்திரமாவது விடயங்கள் விளங்கக் கூடியதாக இருந்தது. ஏனெனில் வேறு எந்த மொழியில் விளங்காமல் வாசிக்க முடியுமாக இருந்தாலும் அரபு பொழியில் விளங்காததை வாசிக்க முடியாது. எனவே வாசித்தவர்களூடாக வாசிக்கப் பட்டவைகள் மக்களைச் சென்றடையும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றய காலத்தில் எத்துனை வசதி வாய்ப்புகள்தான் உள்ளன. அல்குர்ஆன் வேராகவும் ஹதீஸ்கள் வேராகவும் விதம் விதமான அமைப்பில் தொகுக்கப் பட்டு அவைகள் அழகாக மொழிபெயர்க்கப் பட்டும் இருக்கின்றன. இன்னும் எத்தனையோ புத்தகங்களும் சஞ்சிகைகளும் வெளியிடப் படுகின்றன. ஆனால் அவற்றை வாசித்து விளங்க வேண்டும் என்ற ஆர்வமும் முனைப்பும் யாரிடமுமில்லை. யாரோ வாசிப்பதை கேட்டு விட்டால் போதும் அல்லது யாரோ ஒருவர் தனது பயானில் அதைச் சொல்லக் கேட்டால் போதும் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதைவிடவும் ஒரு படி தாண்டி யாராவது நன்றாகப் பேசக்கூடிய ஒருவரை வரவழைத்து ஒரு சிறப்பான பயான்நிகழ்ச்சியொன்றை நடாத்தி விட்டால் போதும் என சிலர் நப்பாசை கொண்டிருக்கின்றனர். இது அந்த பேப்பர் தின்னியின் செயலை விட எவ்வளவு தரம் கெட்ட செயல் என்பது இலகுவாகப் புரியக்கூடியதாகும்……….

உலகப்படிப்பென்றும், உழைப் பென்றும், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி யென்றும் வாழ்க்கையில் எத்தனையோ விடயங்களுக்கு காலம் ஒதுக்கப் படுகிறது. ஆனால் அல்குர்ஆனையும் ஹதீஸையும் படிப்பதற்கென்று எவ்வளவு கால நேரம் ஒதுக்கப் படுகிறது? அல்குர்ஆனுக்கு எத்துனை விளக்க நூல்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் எத்துனை பேரிடத்தில் இருக்கிறது. ஏன் அத்துனை விளக்க நூல்கள் எழுதப் படவேண்டும் என்ற கேள்வி யாருடைய உள்ளத்தில் எழுந்துள்ளது. அதுபோல் அல்குர்ஆனுடன் சம்பத்தப் பட்ட இன்னும் எத்துனையோ கலைகள் உள்ளன. அதுபோலவே ஹதீஸ் விளக்க நூல்களும் அதனுடன் சம்பத்தப் பட்ட இன்னும் எத்தனையோ விடயங்களும் உள்ளன. மேலும்பிக்ஹ்”, “உஸூலுல் பிக்ஹ்என இன்னும் பல விடயங்கள் உள்ளன. இவை பற்றியெல்லாம் பூரண அறிவும், விளக்கமும் பெற்றிருக்காவிட்டாலும்கூட, இப்படியெல்லாம் விடயங்கள் இருக்கின்றன, அவைகள் ஏன் உருவாக்கப் பட்டன போன்ற அடிப்படை விடயங்களையாவது அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற தேவை எத்துனை பேருக்கு ஏற்பட்டிருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் அன்றாடம் தொழுகையில் ஓதக்கூடிய ஓதல்களை விளங்கிக்கொள்ள வேண்டு என்ற தேவை எத்துனை பேருடய உள்ளத்தில் ஏற்பட்டிருக்கிறது? இது சாதரண மக்களின் நிலை மாத்திரமல்ல. இஸ்லாத்தை முழு நேரமாகக் கற்று ஆலிம்கள் என தங்களைக் காட்டிக் கொள்கின்றவர்களின் நிலையும் இதுவே. இஸ்லாத்தைப் படிப்பது என்ற பேரில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் கைப்பிரதியாக எழுதப் பட்ட நூல்கள் சிலதை விளங்கியும் விளங்காமலும் படித்து தமது கற்கைகளை முடித்துக் கொண்டவுடன் தமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என நினைத்துக் கொள்கின்றனர். அல்லாஹ்வின் தூதருக்கே மரண நேரம் வரை அல்குர்ஆனை அல்லாஹ் சொல்லிக் கொடுத்தான் என்பது அவர்களுக்கு சுன்னாவாகத் தெரிவதில்லை.

ஈமான் வளரவேண்டுமென்றால் அதற்கு அறிவும் (இல்ம்) வளரவேண்டும் என அல்குர்ஆன் போதித்துக் கொண்டிருக்கிறது (பார்க்க 35:28) அப்படி இருக்கும்போதுஇல்ம்இல்லாமல்அமல்செய்தால் மாத்திரம் போதும் என்பது எந்தவகையில் இஸ்லாத்தின் போதனையாக அமையும் என்பது இன்னமும் பலருக்கு விளங்காமலேயே இருக்கிறது. இப்படியாக இஸ்லாத்தின் முக்கிய அம்சங்கள் பற்றியெல்லாம் எந்தவித சிந்தனையுமில்லாமல், அல்குர்ஆனை அர்த்தம் தெரியாமல் ஓதல், ஹதீஸ்கள் வாசிக்கப் படுவதை கேட்டல். சுன்னத்தான விடயம் என்று ஷைத்தான் உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்களை யெல்லாம் சுன்னா என நினைத்துப் பின்பற்றல் போன்றன; சாப்பாடு பேப்பரால் சுத்தப் பட்டிருக்கிறது என்பதற்காக பேப்பரைத் தின்ன நினைப்பவனின் செயலைவிடவும் எந்த வகையில் சிறப்பானதாக அமையும் என்று சற்று சிந்தித்துப் பார்தால்…………..

சாப்படு சாப்பிடப் போய் போப்பரை தின்று விட்டு வந்தவனின் செயல் எவ்வளவு கேளிக்கிடமானது என்பது எல்லாருக்கும் விளங்குகிறது. ஆனால் மார்கத்தை பின்பற்றுவது என்ற பெயரில் செய்யப் படும் கேளிக் கூத்துகளை விளங்கிக் கொள்கிக் கொள்ளக் கூடியவர்கள் எத்தனை பேரோ……………….?

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...