Saturday, January 22, 2022

 ஹபாயா

"ஹபாயா" என்பதன் சரியான வடிவம்அபாஎன்பதாகும். அதைஅபாயாஎன்றும் சொல்லலாம். ஆனாலும் எப்படியோ "ஹபாயா" என்பதாக மாறியுள்ளது. (அதேவேளை “ஹிஜாப்என்ற சொல்லும் இதனுடன் சம்பந்தப் பட்டிருந்தாலும் விரிவஞ்சி அது தவிர்க்கப் படுகிறது.


அபாஆஎன்றால்கை இல்லாத ஒரு பெரிய ஆடை, அது சாதாரன ஆடைக்கு மேலால் அணியக் கூடியதுஎன்பதாக அரபியில் வரைவிலக்கணப் படுத்தப் படுகிறது. (இது எப்படி பெண்களின் ஆடையாக மாறியது என்பதைப் பின்னர் காண்போம்). புனித குர்ஆன் பெண்கள் தமது ஆடைகளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதற்கினங்க (பார்க்க தி.கு 33:59) இன்று இஸ்லாத்தைப் பின்பற்றும் பெண்கள் பொதுவாக அணியக்கூடிய ஒரு ஆடையாகா இந்தஹபாயாகருதப் படுகிறது.

 

இஸ்லாம் என்பது ஆதம் (அலை) முதல் தொடர்ந்து வருகின்ற மார்க்கமாகும், அதன் நவீன வடிவமே இன்று முஸ்லீம்கள் பின்பற்றக் கூடிய, அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்பனவாகும் என்பது பொதுவாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். அந்தவகையில் அல்குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களைப் பார்க்கும் போதுஹிஜாப்ஏன் அணிகிறோம் என்பது தெளிவாகும். ("அபா'ஆ" என்பதை ஹிஜாப் எனும் பொது அமைப்பின் ஒரு அங்கமென சுருக்கமாக விளங்கிக்கொள்ளலாம்.)

 

வரலாற்றின் அடிப்படையில், இந்து மதத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது பெளத்த மதமாகும். பெளத்தத்திலே பெண்கள் அணியும் ஆடை மிகத்தெளிவாக விவரிக்கப் பட்டுள்ளது. “வினய பிடாகயஎன்ற பெளத்த அடிப்படை நூலான திரிபிடகம்” (திரிபிடகய) நூலின் பகுதியில் இது விடயமாக தெளிவு படுத்தப் பட்டுள்ளது. அதாவது தேவையான உள்ளங்கியும் அதற்கு மேலால் இரண்டு பட்டு கொண்ட போர்வையும் (உத்தரசங்கா, அன்தரவாசக, சங்காதி) அணிய வேண்டும் என தெளிவு படுத்தப் பட்டுள்ளது. அது மாத்திரமல்ல, பாலியல் ரீதியாக செய்யக் கூடிய தவறுகளும் விலாவாரியாக அதிலே (வினய பீடகம்) விளக்கப் பட்டுள்ளது. அதேவேளை, பெளத்தத்தை ஏற்றுக் கொண்டுசங்காவில்இணைந்த பெண்கள் தலை முடியை முற்றாக வழித்து விடுவதால் தலை முடியை மறைத்தல் என்ற தேவை அவர்களுக்கு இல்லை. மேலும் தான் ஒரு பெளத்த பிக்குனி என்பதை அடயாளப் படுத்தும் விதமாக தலையை திறக்க வேண்டும் என்ற அறிவுறையும் அங்கே (வினயபீடகமில்) வளங்கப் பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்துமே பெண்களின் ஆடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தெளிவு படுத்தும் மிகப் பழமை வாய்ந்த போதனைகளாக அமைந்துள்ளன.

 

புத்த மதத்துக்கு அடுத் இடத்தில் இருக்கும் யூதமதம் மற்றும் கிரிஸ்தவ மதங்களில் பெண்களின் ஆடை எவ்வாறு அமைய வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ள விடயங்கள் மிகவும் தெளிவானவைகளே. அதுவே கிரிஸ்தவ பென் மதகுருகள் அணியும் ஆடையாகும் என்பதை நாம் அறிவோம்.

 

இஸ்லாம் போதிக்கும் பெண்களின் ஆடையும் அதே அமைப்பில் அமைந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். பெண்களின் ஆடை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அல்குர்ஆனின் 24:31, 33:59ம் வசனங்களில் நேரடியாக விளக்கப் பட்டுள்ளன. (மறைமுகமாக உணர்த்தக் கூடிய இன்னும் பல வசனங்களும் உள) இங்கு நாம் கவணிக்கத்தக்க முக்கிய விடயம் என்னவெனில் மற்ற வேதங்களைப் பின்பற்றக் கூடிய பெண்களின் ஆடைக்கும் முஸ்லீம் பெண்களின் ஆடைக்கும் இடையிலுள்ள தொடர்பாகும்.

 

இவ்வாறு பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வது என்ற விடயம் வெறுமனே தமது உடற் கவர்ச்சியை மறைத்துக் கொள்வது என்பதையும் தாண்டி அவர்களது பண்பாட்டு வளர்ச்சியில் எத்தகைய பங்களிப்பை செலுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

கிரிஸ்தவத்தில்சிஸ்டர்என்றும் புத்த மதத்தில்பிக்குனிஎன்றும் அழைக்கப்படுகின்ற இவர்கள் முற்றாக உலக அலங்காரங்களையும், ஆசாபாசங்களையும் துறந்தவர்களாக கருதப் படுகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். உலக ஆசைகளை துறப்பதற்கும், தமது உடலை மறைத்துக் கொள்வதற்கும் மேலும் மோட்சம் எனச் சொல்லக் கூடிய சிறப்பான வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தமுள்ளது என்பதை அறிவு பூர்வமாக தெரிந்து கொள்வது தமது உடலை மறைத்துக் கொள்வதால் உண்டாகக் கூடிய பயன்களை அடயக் கூடியதாக அமையுமாதலால் அது பற்றி சற்று தெரிந்து கொள்வது சிறப்பாகும்.

 

மனிதனிடத்திலே பல்வேறு குறைபாடுகளும் கெட்ட குணங்களும் காணப் படுகின்றன என்பது யாவரும் அறிந்ததே. உலக ஆசைகள் அவனிடத்திலே அதிகரிக்கின்ற போது இந்த கெட்ட குணங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அதன் விலைவாக் இன்னும் பல கெட்ட செயல்களில் அவன் ஈடுபட ஆரம்பிக்கின்றான். மது, போதை, கொலை, களவு, பொய் போன்ற எல்ல கெட்ட செயல்களின் பின்னாலும் பல கெட்ட குணங்கள் அமைந்திருக்கும் என்பது யாரும் மறுக்க முடியாததாகும். இந்த கெட்ட செயல்கள், செய்யக் கூடியவனை மாத்திரமன்றி, செய்யப் பட்ட சமூக அங்கத்தவனையும், அவனது சமூகத்தையுமே  நாசமக்கிவிடும் என்பது யாவரும் தெரிந்துவைத்துள்ள விடயமாகும். இந்த கெட்ட குணங்கள் ஆண் பெண் இருபாலாருக்கும் பொருந்தக் கூடியனவாகும். அவைகளை விட்டும் விடுபட்டு மோட்சம் அடைவதற்காக ஒரு பெண் உலக வாழ்க்கையைத் துறந்து துறவியாக மாறும் போது, கிரிஸ்தவ மற்றும் யூத மதங்களிலும், புத்த மதத்திலும் போதிக்கப் பட்டுள்ள போதனைகளுக்கினங்க அவள் அணிந்து கொள்ளக் கூடிய ஆடைகளையே மேலே கண்டோம்.

 

ஆனால் இஸ்லாம் துறவரத்தைப் போதிக்கும் மார்க்கமல்ல. ஆனாலும் கூட முஹம்மத் நபி (ஸல்) அவர்களது காலம் முதல் பலர் துறவிகளாக வாழ்ந்துல்லனர் என்பதை வரலாற்றினூடாக கண்டு கொள்ளலாம். அல்லாஹ்வின் தூதரின் அருமை மனைவியர்கள் கூட அவருக்குப் பின் வேறு யாரையும் மனமுடிக்காத துறவிகளாகவே வாழ்ந்தனர் என்பதை சிந்திக்கக் கூடியவர் யாரும் உணர்ந்து கொள்வர். ஆனாலும் ஏனய மதங்களைப் போல் இஸ்லாம் உலகை முற்றாகத் துறந்த துறவரத்தைப் போதிப்பதில்லை. மாறாகஸுஹ்த்என்னும் உலகப் பற்றற்ற வாழ்க்கை அமைப்பையே போதிக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் உலகை முற்றாகத் துறந்து, தமது உடலை முற்றாக மறைத்து ஆடை அணியக்கூடிய கிரிஸ்தவ, யூத, பெளத்த மத துரவிப் பெண்களுக்கும் அதுபோல் உடலை மறைத்து வாழக்கூடிய முஸ்லீம் பெண்களுக்குமிடையில் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை என்பதை நாம் முதற்கண் விலங்கிக் கொள்ளலாம்.

 

எனவே ஒரு முஸ்லீம் பெண் தனது உடலை முற்றாக மறைத்து ஆடை அணியும் பொழுது வெறுமனே தனது உடலை பிற ஆடவர் காணாது மறைத்துக் கொள்கிறேன் என்பதையும் தாண்டி, கருணை, தயாலம்,  நளினம் போன்ற இன்னோரன்ன நற்குணங்களை தன்னுள்ளே வளர்த்துக் கொண்டவளாகவும், பொறாமை, பெருமை, வரட்டுத்தனம் போன்ற தீயகுணங்களை விட்டும் நீங்கியவளாகவும் அமைவது அவசியமாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது ஒரு தவறு அல்லது குறை என்பதையும் தாண்டி, தனது கெட்ட குணங்களை மறைத்துக் கொள்வதற்காகவும், தீய செயல்களில் ஈடுபடுவதற்கு இலகுவாக இருப்பதற்காக அவள் பிறறது கண்ணில் படாமல் தன்னை மறைத்துக் கொள்வதற்காக அணிந்து கொள்ளக் கூடிய ஒரு திரையாக மாத்திரமே அமையும் என்பதுடன், அந்த உண்ணதமான ஆடை அமைப்புக்கே துரேகம் இழைத்ததாகவே அமையும் என்பதை அந்த ஆடையை அணியும் பெண்களும், அதை அணியத்தூண்டும் ஆண்களும் கண்டிப்பாக கருத்தில் கொள்ளவேண்டும். அதேவேளை, பிறர் கண்ணில் படாமல் தம்மை மறைத்துக் கொண்டு பல பெண்கள் தமது கணவனல்லாத பிற ஆண்களுடன் தொடர்புகளை உறுவாக்கிக் கொண்டிருப்பதும், இராக்களியாட்ட விடுதிகளுக்குப் போய்வருவதும் நிதர்சனமாக நடைபெருவதற்கான பல சான்றுகள் உள்ளன என்பதை சுய புத்தியுள்ள யாரும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.

 

ஒரு பெண் உடலை எப்படிப் போனாலும், தனது அழகை / கவர்ச்சியைக்கூட முற்றாக மறைத்துக் கொள்ளவேண்டும் என அல்குர்ஆன் போதிக்க வில்லை. பெண்களின் ஆடை எவ்வாறு அமையவேண்டும் எனப் போதிக்கும் அல்குர்ஆன்வெளியில் தென்படக்கூடய கவர்ச்சிகள் (ஸீனா)” என்ற ஒரு விதிவிலக்கை ஏற்படுத்தியிருக்கிறது (24:31) என்பதை (தனது சுய அபிப்பிராயத்தில் பற்றுள்ளவர்களைத்தவிற) அல்குர்ஆன் மீது பற்றுள்ளவர்கள் யாரும் மறுக்க முடியாது. எனவே வெறுமனே பெண்களை மறைத்து, அடைத்து போட்டுவிடுவதால் எதுவும் அமைந்து விடாது, மாறாக அங்கே பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப் படவேண்டும் என்பதே அல்குர்ஆனின் போதனையாகும் என்பது விளங்கிக் கொள்ளப் படவேண்டும். சாப்பாடு என்றால் வெருமனே சோறு மாத்திரம் இருந்தால் போதாது, அங்கே பொரித்த கோழி இருக்க வேண்டு, மாசி சம்பால் இருக்க வேண்டும், அச்சாறு இருக்க வேண்டும், வட்டிலப்பம் இருக்க வேண்டும் என விளங்கி வைத்துள்ளவர்களுக்கு ஒரு பெண் வெறுமனே தனது உடலை மறைத்துக் கொண்டால் மாத்திரம் போதாது மாறாக இன்னும் பல அம்சங்கள் அங்கே கருத்தில் கொள்ளப் படவேண்டும் என்பது விளங்காமல் இருப்பதற்கு காரணம் வெரும் நடிப்பே அல்லாமல் வேறெதுவும் இருக்க முடியாது. இத்தகைய முனாபிக்குகளை பின்பற்றுவதால் தமக்கு  நேர்வழி கிடைக்கும் என நினைத்துக் கொள்வது, பகற்கணவாகவும், கானல் நீரகவும் மாத்திரமே அமையும். (உள்ளத்தை பக்குவப் படுத்துவதை விட்டு விட்டு தோற்றத்தை மாத்திரம் மாற்றிக் கொள்வதற்கும், தோற்றத்தை , மாற்றிக் கொண்டு தனது காரியத்தை சாதித்துக் கொள்வதற்கும் (முனாபிக் தனத்திற்கும்) இடையில் பெரிய வித்தியாசம் ஏதுவும் கிடயாது).

 

எனவே ஒரு பெண் தனது உடலை முற்றாக மறைத்துக் கொள்வது என்பது முஸ்லீம் பெண்கள் மாத்திரமல்ல, இன்னும் பல மதங்களிலும் புனிதமான பெண்கள் செய்யும் செயலாகும் என்பது விளங்க்கிக் கொள்ளப் படவேண்டும். அவ்வாறு தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் பெண்கள், இஸ்லாம் போதிக்கும் இன்ன பல நற்பண்புகளை தன்னிடத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையான அறிவை பெற்றுக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டப் படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தான் அணிந்திருக்கும் ஆடைக்கு மாத்திரமல்ல, அதைப் போதிக்கும் மார்க்கத்துக்கும், அதைப் பின்பற்றும் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டதாக அமையும் என்பது யாரும் அறிந்து, தெளிந்து, உணர்து கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சமாகும்.

 

இஸ்லாத்திலே அடைந்து கொள்ள வேண்டிய இலக்குகள் என்றும், அதை அடைந்து கொள்ளக் கூடிய வழிமுறைகள் என்றும் இரண்டு அம்சங்கள் வகுக்கப் பட்டுள்ளன. அடையக் கூடிய இலக்குகளில் முக்கிய சில அம்சங்களைமகாஸிதுஸ் ஷரீஆ” (ஷரீஆவின் இலக்குகள்) என முன்வாழ்ந்த அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். அதற்கு ஒரு சிறிய உதாரணம் தான் தொழுகைக்காக வுழூ செய்வதாகும். தொழுகைக்கு தன்னைத்தயார்படுத்துவதற்காக செய்யும் கை, கால், முகம் கழுவுதல் என்பது தன்னீர் இல்லாத சந்தர்ப்பத்தில் மன்னைத் தொட்டுதயம்மம்செய்தல் என்பதாக மாறும். அதுபோல் மார்க்கத்தில் போதிக்கப் பட்டுள்ள பல்வேறு அம்சங்களுக்கு இலக்குகள் உள்ளன. அந்த இலக்குகளை அடைவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப் படுமேயல்லாமல் வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படமாட்டாது.

 

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒன்பது முக்கிய விடயங்களின் மீதி சத்தியம் செய்து விட்டுயார் உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றவர்களாவர்என அல்குர்ஆன் போதிக்கிறது (பார்க்க 91:1-8) இது அல்குர்ஆன் உலப்பக்குவத்தை ஆணித்தரமாக போதிக்கிறது என்பதற்கு போதுமான சான்றாகும். இந்த விடயத்தை ஒரு அழகான சம்பவம் விளக்குகிறது. முன்னர் வாழ்ந்த சமூகத்தில் ஒரு பெண் பாலை வனத்தினூடாக சென்று கொண்டிருக்கிறாள். அப்பொழுது அவளுக்கு தன்னீர் தாகம் ஏற்படுகிறது. தன்னீர் அருந்துவதற்காக ஒரு கினற்றில் இறங்கி தன்னீர் அருந்தி விட்டு மேலே வந்தபோது அங்கே ஒரு நாய் தன்னீர் தாகத்துடன் இருப்பதைக் காண்கிறாள். தனக்குப் போலவே அந்த நாய்க்கும் தன்னீர் தாகம் உள்ளது என்பதை உணர்ந்த அந்தப் பெண், தன்னீர் அள்ளுவதற்கு வேறு உபகரணங்கள் இல்லாமையால் தனது காலுரை (சாப்பாத்தில்) தன்னீரை நிறைத்துக் கொண்டு மேலே வந்து அந்த நாய்க்கு தன்னீர் புகட்டுகிறாள். அவள் செய்த அந்த நற்செயலின் காரணமாக அதுவரைக் காலமும் அவள் செய்து வந்தஸினாஎனும் பெரும் பாவத்தை அல்லாஹ் மண்ணித்து விடுகிரான் என்ற இந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பார்க்க முஸ்லிம்)

 

இஸ்லாத்திலே தகாத உறவு என்பது மூன்று வகையாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. அதிலே தன்னினச் சேர்க்கை என்பது ஆகக் குறைந்த தண்டனைக்குறிய குற்றமாகும். திருமனமாகாத/ கணவனில்லாத ஒரு பெண் சம்பாத்தியத்திற்காக செய்யும் செயல் என்பது இன்னுமொரு வகை. திருமனமான ஒரு பெண் தனது கணவனுக்கு துரோகமிழைக்கும் விதத்தில் பிற ஆடவனுடன் தொடர்பு வைத்திருத்தல் என்பது மிகக் கடுமையான தண்டனைக் குறிய விடயமாகும். இதுவேஸினாஎன்பதனூட கருதப் படுகிறது. அதற்கமையவே அண்மையில் சவுதி அரேபியாவில் தகாத உறவில் ஈடு பட்டதாக் குற்றம் சாட்டப் பட்ட ஒரு பெண் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்கப் பட்டால் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த பல்வகைப் பட்ட தகாத உறவுகளில் இங்கு குறிப்பிடப் பட்ட சம்பவத்தில் சொல்லப் பட்ட பெண் செய்த குற்றச் செயல் அத்துமீறிவள் (பகிய்யு) என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது எத்தகைய குற்றச்செயல் என்பது சற்று தெளிவில்லாமல் இருந்தாலும் கூட அவள் செய்து வந்தது கடுமையான பாவம் என்பது தெளிவாகச் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.  அவ்வளவு கடுமையான, மோசமான செயலில் ஈடு பட்ட ஒரு பெண் கூட ஒரு நாய்க்கு தன்னீர் புகட்டியதனால் மண்ணிக்கப் படுகிறாள் என்றிருந்தால், ஒரு பெண்ணின் உளப்பக்குவத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் மார்க்கத்தில் வழங்கப் பட்டுள்ளது என்பது விளங்கிக் கொள்ளத் தக்கதாகும். அதுபோலவேஒரு பூணையைக் கட்டி வைத்த ஒரு பெண் நரகில் நுழைந்தால் என்பதும் (பார்க்க ஹதீஸ் புகாரி, முஸ்லிம்) இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.

 

எனவே பெண் தனது உடலை முற்றாக மறைத்துக் கொள்வதனூடாக எவ்வாறு தனது உளப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்ற விடயம் ஆய்ந்து தெளிவு பெறப்படவேண்டிய ஒரு விடயமாக இருப்பதுடன் அவ்வாறு ஆடை அணியும் பெண்கள் இஸ்லாம் போதிக்கும் இன்ன பல நற்பண்புகளை தன்னிடத்தில் வளர்த்துக் கொள்ளவதிலும் அக்கறை காட்டவேண்டும். அதற்கு அடிப்படையான அறிவை பெற்றுக் கொள்வதில் அதிக முனைப்பு காட்டப் படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தான் அணிந்திருக்கும் ஆடைக்கு மாத்திரமல்ல, அதைப் போதிக்கும் மார்க்கத்துக்கும், அதைப் பின்பற்றும் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டதாக அமையும் என்பது யாரும் அறிந்து, தெளிந்து, உணர்து கொள்ளப் படவேண்டிய முக்கிய அம்சமாகும்.

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...