Saturday, January 22, 2022

 வறுமை

வறுமை என்பது இன்று அடிக்கடி பேசப்படும் ஒரு பொருளாக மாறி வருகிறது. இந்த வறுமையைப் பற்றி பேசும் பொழுது முதற்கண் அதுபற்றி, இறைவேதம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்வது சாலச்சிறந்ததாகும்.

 

நாம் உங்களை, அச்சத்தைக் கொண்டும், வறுமையக் கொண்டும் (பட்டினி), பொருள் இழப்பைக் கொண்டும், உயிரிழப்பைக் கொண்டும், அருவடை இழப்பைக் கொண்டும் சோதிப்போம், (அத்தைகைய சந்தர்ப்பங்களில்) பொருமை கொள்வேருக்கு நன்மாராயனம் கூறுவீராக” (அல்-குர்ஆன் 2:100) என்று ஒருமுறை கூறுகிறது.

 

நாம் இந்த உலகத்தில் உங்களைப் படைத்திருப்பதன் நோக்கமே உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காகத்தான்” (பார்க்க அல்-குர்ஆன்  ) என்று இன்னொரு முறை கூறுகிறது.

 

உங்களுடைய செல்வங்களும், ஆண் குழந்தைகளும் சோதனைப் பொருள்களேயன்றி வேறொன்றுமில்லை (அல்குர்ஆன் 6:28) என்று இன்னொரு முறை கூறுகிறது.

 

இதுபோன்ற இறைவேத வசனங்களினூடாக நாம் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒரு விடயம் என்னவென்றால், நாம் எதிர்ப் பார்த்திருக்காத சந்தர்ப் பத்தில், எதிர்பாராத விதமாக செல்வம் வந்து சேரும். அதன் மூலம் இறைவன் எம்மை சோதித்துப் பார்க்கிறான். அதுபோலவே, நாம் எதிர்ப்பார்த்திருக்காத விதமாக, பொருள் இழப்புக்கள், உயிரிழப்புக்கள், அருவடை இழப்புக்கள், மற்றும் வருமை என்பன ஏற்படும். அதன் மூலமும் இறைவன் எம்மை சோதித்துப் பார்க்கிறான். (அது போலவே அச்சத்துக்குறிய சந்தர்ப்பங்களும் ஏற்படும். விரிவஞ்சி அது தவிர்க்கப் படுகிறது).

 

இங்கு ஏற்படுகின்ற ஒரு கேள்வி அல்லது நாம் விளங்க்கிக் கொள்ள வேண்டி ஒரு முக்கிய விடயம், “ஏன் எதிர்ப்பார்க்காத விதமாக….” என்பதாகும்?

 

அதற்கு ஒரு சுறுக்கமான விடை கூறுவதென்றால், எப்பொழுதுமே நன்றாக படிக்கக் கூடிய, பாடங்களை தெளிவாக விளங்கி வைத்திருக்கக் கூடி ஒரு மாணவனுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு வினாத் தாலை கொடுத்தால் அதை அவன் சிறப்பாக செய்து முடிப்பான். மாறாக பரீட்ச்சைக் காலங்களில் மாத்திரம் படிக்கக் கூடியவர்கள் சிலபோது தான் ஏழுதிய விடைகளையே பின்னர் மறந்திருப்பர் என்பது எம்மில் பலரது அனுபவமாக இருக்கும். எனவே ஒருவனது அறிவையும், ஆற்றலையும், முயற்சியையும் சரியாக விளங்கிக் கொள்வதற்கான வழிமுறையாக எதிர்ப்பாராத விதமாக ஒரு பரீட்சை நடாத்துவதே பொருத்தம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பரீட்சைகளையே உருவாக்கிய அந்த மாபெரும் பரீட்சையாளனுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது. எனவேதான் அவனும் அளவற்ற சிறப்புகள் நிறைந்த, மகத்தான அந்த  சுவர்கத்தைப் பரிசாகப் பெறத்தகுதியானவர்களை சோதிப்பதற்காக எதிர்ப் பாராத விதமாக பரீட்சைகள் நடத்துகிறான்.

 

அந்தப் பரீட்சையில் ஒன்று, வருமை ஏற்படுவதாகும். வருமையைக் குறிக்கப் பல அரபிச் சொற்கள் உள்ளன. அதில் ஒன்றுஜூஃ” (பட்டினி) என்பதாகும். பட்டினி என்பது வருமையின் நிலையை சரியாக இனங்காட்டிச் சொல்லும் சொல்லாகும். அதாவது வருமை என்பது வேறு, பட்டினி என்பது வேறு. வருமையில் இருக்கும் ஒருவனுக்கு பிறருக்கு உதவ முடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் பட்டினியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒன்றில் அவர் பிறரது உதவியுடன் பட்டினியைப் போக்கிக் கொள்ளலாம். அல்லது கடன் பெறல் மற்றும் இருக்கின்ற விடயங்களைப் போதுமாக்கிக் கொள்ளல் என்பதனூடாக அதை செய்து கொள்ளலாம். ஆனால் பட்டினி என்பது அந்த வருமையை அனுபவிக்கும் நிலையாகும். பட்டினியின் காரணமாக அவனது தேவைகள் பூர்த்தி செய்யப் படாமலேயே இருக்கும். அதன் விளைவாக அவனது உடல் மெலிந்து போகும். இன்னும் சிலபோது வேறு பல பிரச்சிணைகளும் அதனூடாக எற்படலாம். இவ்வாறு தொடந்த்தேர்ச்சியாக ஏற்படக்கூடிய கஷ்டங்களையே பட்டினி என்பது குறிக்கும். இப்படியான ஒரு கஷ்டமான நிலையினூடாக அல்லாஹ் எம்மை சோதிப்பான் என்பதாகவே அந்த இறைவேத வசனம் சொல்கிறது (அல்லாஹ் அதிலிருந்து எம்மனைவருக்கும் ஈடேற்றம் தருவானாக). அப்படியான கஷ்டமான நிலைகளுக்கு முகம் கொடுப்பது, அத்தகை சந்தர்ப் பங்களில் வருமையைக் காரணம் காட்டி அல்லாஹ்வின் கட்டலைகளுக்கு மாறு செய்யாமல் பொருமையாக வாழ்வது, மற்றும் அல்லாஹ்விடத்தில் மாத்திரமே உதவி தேடுவது என்பன அதிகம் நன்மை தரக்கூடிய செயல்களாகும் எனவும் அத்தகைய பொருமை சாலிகள் அல்லாஹ்வுக்கு விருப்பமானவர்கள் என்றும் பல அல்குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. (பார்க்க 2:177, 3:146, 6:46, 33:25, 39:10)

 

வறுமையைப் பற்றி இறைவேதம் கூறக்கூடிய விடயங்கள் சிலவற்றை அறிந்து கொண்ட பின்னர், வருமை என்றால் என்ன என்பதை சற்று அலசிப் பார்ப்போம். வறுமை என்றால் தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலை என விளங்கிக் கொள்ளலாம்.

 

அதற்கிணங்க இன்றய காலத்திலுள்ள வருமை ஒரு வித்தியாசமான அமைப்பைப் பெற்றுள்ளதை நாம் உணராலாம். அதாவது மனித தேவைகள் எண்ணிலடங்காத அளவு பல்கிப் பெறுகிக் கொண்டே போகிறது. மற்றொண்று, மக்கள் மத்தியில் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாழ்வது, துனையாக நடந்து கொள்வது குறைந்து கொண்டே வருகிறது. போட்டி, பொறாமை போன்ற மனோ இச்சையுடன் சம்பந்தப் பட்ட விடயங்கள் மார்க்க விடயங்களிலும் நுழைந்து பிரச்சிணைகள் உண்டு பண்ணக் கூடிய அளவுக்கு கட்டிலடங்காமல் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. ஒரு அமைப்பு அல்லது ஒரு குழு சிறப்பாக இயங்கி இறைபணி செய்வது இன்னொரு அமைப்பில் உள்ளவர்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு மனோ இச்சை மேலோங்கி வருவகிறது. இந்த விடயங்கள் இங்கே தெளிவு படுத்தப் படுவதன் காரணம், எம்மத்தியில் பரவி வரும் வருமைக் கான தீர்வும் அவைகளிலேயோ இருப்பதனாலாகும்.

 

இறைவேதத்தில்நூன்" / "கலம்எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் சோதனைக் குள்ளாக்கப் பட்டவர்கள் சிலரது ஒரு அழகான சம்பவத்தை சொல்லிக் காட்டுகிறான்.

 

அவர்கள் ஒரு நல்லடியாருக்குப் பிறந்த ஆங்குழந்தைகள். ஒரு நல்லடியாருக்குப் பிறந்த அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஆனால் இந்த சம்பவத்தில் கூறப்பட்டவர்களில் தீயவர்கள் நல்லவர்களை மிகைத்துவிடுகின்றனர். அவர்கள் அந்த நல்லடியாரான தமது தந்தை வழமையாக அருவடையின் போது ஏழைகளுக்கு கொடுத்து வந்த பங்கை இதன் பிறகு கொடுப்பதில்லை எனத்தீர்மானிக்கின்றனர். அவ்வாறு தீர்மானித்தபோது அங்குள்ள ஒரு நல்லவர் அதனை மறுக்கிறார். ஆனாலும் அவர் அங்கே சிறுபான்மையாக்கப் பட்டு அவரது கருத்து மறுக்கப் படுகிறது.

 

அவர்கள் ஏகமனதாக தீர்மானித்தது போன்று தாம் அருவடை செய்யும் வேளை ஏழைகள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விடாமல் இருப்பதற்காக அதிகாலை வேளையிலேயே யாருக்கும் தெரியாமல் செல்கின்றனர். அவ்வாறு தமது விளை நிலத்திற்கு சென்றடைந்த போது ஒரே இரவில் தமது அருவடைகள் அனைத்தும் அழிக்கப் பட்டிருப்பதைக் காண்கின்றனர். அது அல்லாஹ்வால் அவர்கள் செய்த பிழைக்கான தண்டனை என்பதை உடனே உணர்ந்து கொள்கின்றனர். ஆனாலும் அவர்களால் தாம் செய்த பிழையை ஒத்துக்கொள்ளும் மனோ நிலை அவர்களுக்கு வரவில்லை. எனவே ஒவ்வொருவரும் தாம் பிழை செய்வதற்கு காரணமாக மற்றவர் அமைந்ததாக ஒருவரை ஒருவர் சாடி சச்சரித்துக் கொள்கின்றனர். அந்நிலையில் அங்கே சிறுமையாக்கப் பட்டவருடன் அல்லாஹ் சேர்ந்து கொண்டு விட்டதனால் அவர் பெரும்பான்மை பலம் பெற்று தனது கருத்தை உரத்துச் சொல்கிறார். “நான் உங்களுக்கு சொன்னேன் அல்லவா, அல்லாஹ்வை புகளுங்கள் (தொழுங்கள்) என்று. ஆனால் நீங்கள் கேட்கவில்லை. இப்பொழுது நீங்கள் உங்கள் பிழைக்காக அல்லாஹ்விடத்தில் பிழை பொருக்கத்த்தேடுங்கள்என்று. அப்பொழுது எல்லோரும் அல்லாஹ்விடம் தாம் செய்த பிழைக்காக பிழை பொருக்கத்தேடுகின்றனர். (பார்க்க தப்ஸீர் பீ ழிலாலில் குர்ஆன், குர்துபி)

 

இவ்வாறு ஒரு கஷ்டம், ஒரு அழிவு, பிரச்சிணைகள் ஏற்படுவது நாம் செய்து வந்த தவறுகளை உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே நாம்அல்குர்ஆனில் ஒளியில் நாம் விளங்கிக் கொள்ளலாம். அது யார் என்ன தவறு செய்தார் என்பது அடுத்தவரால் தீர்மானிக்க முடியாது. மாறாக மூஸா (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்டது போன்று அவரவர் செய்த பிழை அவரவருக்கு மாத்திரமே தெரியும்.

 

எனவே இத்தகைய, சில சோதனைகள் ஏற்பட்ட போது, உணர்ச்சிவசப்பட்டு, பொருமையிழந்து பிழையான செயல்களில் ஈடுபடுவதை தவிர்ந்து கொள்வதுடன் அந்த சோதனைகளை, நாம் பிழையான வழியில் போய்க்கொண்டிருந்த எம்மை தடுத்து நிறுத்தி எமது பாதையை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பாகவே நாம் கருத வேண்டும். அத்தகைய ஒரு வாழ்க்கைப் பாடத்தைத் தான்நூன்எனும் அத்தியாயத்திலும் கூட நாம் காணலாம்.  

 

அடுத்து இந்த வருமையை நாம் எவ்வாறு முகம் கொடுப்பது எனச் சிந்தித்துப் பார்த்தால்……………………………

தொடரும்,,,,,,,

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...