இலங்கையில் முஸ்லீம்களின் இருப்பு
இலங்கையில் முஸ்லீம்களின் இருப்பையும் அவர்களின் எதிர்காலத்தையும் வடிவமைக்கின்ற
பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகளில் முஸ்லீம்களின் கடந்த கால வரலாற்று உண்மைகளும், இஸ்லாத்தின் போதனைகளும் முக்கியமானவைகளாகும்.
முஸ்லீம் சமூகத்தின் பொதுவான பலவீனங்களும், முஸ்லீம்களுக்கு எதிராக
திட்டமிட்டு உருவாக்கி விடப்பட்டுள்ள வெறுப்பலைகள் காரணமாகவும் முஸ்லீம்கள் மேற்சொன்ன
விடயங்களில் கரிசனை காட்டத் தவறுவது அவர்களின் எதிர்கால இருப்பு சம்பந்தமாக அதிகம்
தாக்கம் செலுத்தக்கூடியது எனும் அம்சம் முஸ்லீம் சமூகத்தின் புத்திஜீவிகள் என தம்மை
இனம்காணுகின்றவர்கள் அவசியம் தெரிந்திருக்கவேண்டிய ஒரு விடயமாகும்.
தெற்கிலே பண்டைய இந்தோனேசிய சாம்ராஜ்யத்துடன் தொடர்பு கொண்ட மலாயர்களும், வடக்கு மற்றும் கிழக்கிலே
தென்னிந்தியாவுடன் தொடர்புள்ள தமிழர்களும், மேற்கிலே சர்வதேசவர்த்தகம்
மற்றும் அராபிய நாடுகளுடன் தொடர்புள்ள அராபியரும், இடையிலே ஆங்கிலேயரின்
ஆட்ச்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் வந்தேறிய மலாயர்களும், மற்றும் மலபாரிகளும் எனும் பட்டியலில் மொரோக்கோவிலிருந்து
வந்த அராபியர்கள் என இனங்காணப் படுகின்றவர்கள் உண்மையில் மொரோக்கோ பிரதேசத்தைச் சார்ந்தவர்களா
அல்லது இஸ்பெயினிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லீம்கள் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களின்
துணையுடன் இலங்கையை வந்தடைந்தனரா என்பதும் நாம் ஆய்ந்து தெரிந்து வைத்திருப்பது சிறப்பாகும். மரபணு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இக்காலத்தில்
அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவது இலகுவான காரியம் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்
தக்கதாகும்.
மேற்சொன்ன அம்சங்கள் பற்றிய உண்மைகளும், தெளிவுகளும் பொதுவாக
முஸ்லீம் சமூகம் எவ்வாறு நாட்டு மக்களுடன் நடந்துகொள்ளக் கடமைப் பட்டவர்கள் எனும் விடயத்தை
யாவருக்கும் உணர்த்த துணை செய்வதுடன் இதுவிடயமாக இஸ்லாம் மார்க்கம் முன்வைத்துள்ள போதனைகளை
சரிவர பின்பற்றவும் துணை செய்யும் என்பதும் நம் உணர்ந்துகொள்ள வேண்டிய விடயங்களாகும்.
அதன் மறுபக்கமாக முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றபொழுது தமக்கு அடைக்கலம் வழங்கி, பாதுகாப்புத் தருகின்ற
நாட்டு அரசுடனும் மக்களுடனும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் வகுத்துத்தந்துள்ள
போதனைகளும் தெளிவாக கற்றறியப் படவேண்டிய விடயமாகும்.
இந்த இரண்டு அம்சங்களும் “பர்ளுகிபாயா” எனச் சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம்
வாய்ந்தன ஆதலால் துறைசார்ந்தவர்கள் இதுவிடயமாக தனிப்பட்ட முறையிலும் குழுக்களாகவும்
ஆய்வுகள் செய்த்து தெளிவுகளை முன்வைப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
இத்தகைய தெளிவுகள் எதுவும் இல்லாத நிலையில் வெறுமனே ஆரம்ப கால இஸ்லாமிய வெற்றி
வரலாற்றை மாத்திரம் கற்றவர்கள் தம்மை அந்தக் கனவு வெற்றி ராஜ்யத்தின் அங்கமாக நினைத்துக்
கொண்டு செயல்பட முனைவதும் சமூகத்தில் தீவிரவாத சிந்தனை உடயவர்கள் தோற்றம் பெறுவதற்கு
முக்கிய காரணமாகும் என்பது சமூகத்தின் புத்தி ஜீவிகள் நன்குரணர்ந்து கொள்ளவேண்டிய முக்கிய
விடயமாகும்.
மேற்சொன்ன இரண்டு விடயங்களுக்கும்
அப்பால் இலங்கை முஸ்லீம் சமூகத்தில் காணப்படுகின்ற தோற்றப்பாடுகளான: அவன் "மெலே", இவன் கிழக்கு மாகாணத்தான், அவன் புத்தளத்தான், இவன் தப்லீக், அவன் "தெள" பார்டிو இவன் ஜமாத்தே இஸ்லாமி, அவன் ஸலாமா பார்ட்டி இவன் தக்கியா பார்டி என சொல்வதற்கே
அருவருப்பான அமைப்பிலே இந்த சிறுபான்மைக் கூட்டம் கூறு கூறாகப் பிரிந்திருப்பது எந்தவகையில்
பொருத்தமானது என்பதுவும் யாவரும் சிந்திக்கத் தக்கதே.
No comments:
Post a Comment
We value your feed back