Saturday, January 22, 2022

 வெள்ளி மேடை

இஸ்லாம் மனித சமூகத்துக்கு பல அறிய அம்சங்களை அறிமுகப் படுத்தித்தித் தந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான் வெள்ளி மேடையாகும். ஒப்பீட்டளவில் எனைய மதத்தவர்களைவிடவும் வாராந்தம் தமது மத ஆலயங்களில் கூடிக்கலையும் பக்தர்களில் முஸ்லீம்கள் முதலிடத்தை வகிப்பது இங்கு முதற்கண் சுட்டிக் காட்டத்தக்கதாகும். இப்படியான ஒரு அருமையான சந்தர்ப்பமாக இந்த வெள்ளி மேடை காணப் பட்டாலும் அதிலிருந்து முஸ்லீம்கள் பனடைகின்றனரா என்பது நாம் சிந்தித்துணரவேண்டிய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

 

அறிஞர் "யாஸீர் அல் காஸி" அவர்கள் தமது ஒரு உரையில் சொல்வது போன்று முஸ்லீம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கு நாளை விடிவு வருமா என ஏங்கிக் கொண்டிருக்கையில், நேற்றை நாளை மிஞ்சிவிடும் அளவில் இன்னொரு துன்பம் முஸ்லீம் சமூகத்தை ஆட்கொள்ளும் நிலையையே நாம் கண்டு கொண்டிருக்கிறோம். இப்படியாக துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமூகத்துக்கு விடிவைக் கொண்டுவந்து தரும் ஒரு உண்ணத வளிமுறையாக இந்த வெள்ளி மேடைகள் காணப்படுகின்றபோது, அவை முறையாகப் பனன்படுத்தப் படுகின்றனவா என அலட்டிக் கொள்வது முஸ்லீம் சமூகத்தின் மீது அக்கரையுள்ளவர்கள் அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும்.

 

அப்படி என்னதான் சக்தி இந்த வெள்ளி மேடைக்கு இருக்கிறது என்பதை முதற்கண் பார்த்து விடுவோமே

 

மனிதனை நாம் ரோபோக்களாக ஒருகணம் சிந்தித்துப் பார்ப்போம். அந்த ரோபோக்கள் ஏதாவது ஒரு புதிய பணியை எல்லாமாக சேர்ந்து செய்ய வேண்டுமென்றிருந்தால் அவைகளை இயக்குகின்ற பொரியியலாளன் என்ன செய்வான்..? அந்த ரோபோக்களுக்கு அதற்கான கட்டளையை வளங்குவான். அவாறு அந்தக் கட்டளைகளை வளங்க எல்லா ரோபோக்களுடனும் அவன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்தக் கட்டளைகளை பதிவேற்றம் (அப்லோட்) செய்ய வேண்டும். அதன் பின்னர் எல்ல ரோபோக்களுமாக சேர்ந்து புதிய அந்த வேளையை செய்ய ஆரம்பிக்கும். அவ்வறு ரோபோக்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாமல்சிக்னல்குறைபாடு அல்லது வேறு தடைகள் இருந்தால் அவ்வறு கட்டளைகளை அப்லோட் செய்யவும் முடியாது. அதன் பயனாக புதிய வேளையில் ரோபோக்களை ஈடுபடுத்தவும் முடியாது.

 

இவ்வாறுதான் முஸ்லீம் சமூகத்தை நாம் புதிய ஒருதிசையில் செலுத்த வேண்டுமென்றிருந்தால் அந்தத் திசை பற்றிய தெளிவை முன்வைப்பதற்காக அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அந்தத் தொடர்பை எற்படுத்தித் தரும் உண்ணத வளிமுறையே இந்த மிம்பர் மேடைகள் அல்லது வெள்ளி மேடைகளாகும்.

 

அது மாத்திரமல்ல வெள்ளி மேடையில் நின்று கொண்டு இமாம் கேட்கின்ற து மிகவும் சத்தி வாய்ட்ந்ததாகும். ஒரு சமூகம், ஒரு சிறந்த இமாம் வெள்ளி மேடையில் நின்று கொண்டு பிராத்தணை செய்ய அதை அந்த சமூகம் நன்மனதுடம் ஆமீன் எனச் சொல்லுமாக இருந்தால் நபிமார்களின் பிரார்த்தனையை ஒத்ததாக அது அமைந்து விடும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இப்படியாக இருபாக்க பலன்கள் நிறைந்த ஒரு உன்னத அம்சமே இந்த வெள்ளி மேடை என்பதை  நாம் முதற்கண் தெளிவாக விளங்கிக் கொள்வது சாலப் பொருத்தமாகும்.

 

இப்படிப்பட்ட உண்ணத மிக்க இந்த வெள்ளி மேடை அதற்குறிய முறையில் பயன்படுத்தப் படுகிறதா என்பதே இங்கு நாம் அலசும் முக்கிய விடயமாகும்.

 

இந்த வெள்ளி மேடையில் என்ன நடக்கிறது என்பதையும் அதனால் என்னென்ன விளைந்துள்ளன என்பதையும் சுறுக்கமாக சொல்வதென்றால், முஸ்லீம் சமூகத்தில் காணப் படும் அத்துனை பிரச்சிணைகளும் ஊற்றெடுத்து ஓடக் கூடிய இடமாக இந்த வெள்ளி மேடையே அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. ஒரு பக்கம் வெள்ளி மேடைகள் தவறாகப் பயன் படுத்தப் படுகின்றன. மறுபக்கம் அவை முறையாகப் பயன் படுத்தப் படுவதில்லை. இந்த இரண்டினனதும் விளைவையே நாம் எமது சமூகத்தில் கண்டு கொண்டிருக்கிறோம். இந்த வெள்ளி மேடை சிறப்பாக மையவேண்டுமென்றால் அதற்காக கீழ்வரும் முக்கிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு அவை செயற்படுத்தம்ப் படவேண்டும்.  

 

வெள்ளி மேடைகளில் ஏறக்கூடிவர்களான உலமாக்கல் எனச் சொல்லப் படுவோர் முதற்கண் தாம் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் தாம் குறிப்பிட்ட சிலகாலம் மத்ரசாக்களில் கற்றது மாத்திரமே அறிவு அதற்கப்பால் வேரெதுவுமில்லை என்ற எண்ணத்தை முற்றாக மாற்றிக் கொள்ள வேண்டும். மத்ரசாக்களில் தான் கற்ற விடயம் மத்ரசாக்களின் வெள்ளி மேடைகளில் ஓதப் படலாம். ஆனால் அதிகமானவர்கள் அதே பாடத்தையே பொது வெள்ளி மேடைகளிலும் ஒப்புவிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருப்பதே முதலாவது முஸீபத்தாகும். இந்த விடம் முதற்கண் மத்ரசாக்களில் போதிக்கப் படவேண்டும். இல்லாவிட்டால் இந்த வெள்ளி மேடைகள் சீரடையமும் மாட்டாது, அதன் பயனாக முஸ்லீம் சமூகத்தில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படவும் மாட்டாது.

 

இந்த உலமாக்கள் முதற்கண் விளங்கிக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் தாம் மத்ரசாக்களில் கற்றவை வெறுமனே ஒரு முகவுரை அல்லது தயார் நிலை மாத்திரமே என்பதாகும். அதன் பின் அவர்கள் சமூகத்தின் அன்றாட நிலைமைகளை அறிந்து, அதற்கேற்ப தமது மார்க்க அறிவை விருத்தி செய்து கொண்டு அதன் அடிப்படையிலேயே வெள்ளி மேடைகளில் அவர்கள் உரை நிகழ்த்தப் பழகிக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தொடர்ந்தும் கற்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இன்றய காலத்திலென்றால் ஏகப் பட்ட புத்தகங்கள் வித்தியாசமான மொழிகளில் கிடைக்கப் பெருகின்றன. அவற்றை வாசித்து, குறிப்பிட்ட விடயம் பற்றி தமது அறிவை வளர்த்துக் கொண்டு அதன் பின்னரே தமது குத்பாக்களை தாயார் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தமது அறிவை விருத்தி செய்து கொள்வது பல ஆயிரம் ரக்அத்துகள் தொழுவதை விடவும் சிறந்த நன்மைகளை தருவதாக அமையும் என்பது நான் சொல்லி யாரும் தெளிய வேண்டிய அவசியம் இருக்காது எனக் கருதுகிறேன். இது விடயமாக பள்ளி நிருவாகிகளும் சற்று கருத்தில் கொண்டு பள்ளி வாயல்கள் தோரும் புத்தக அரைகள் அமைப்பதுடன் அவற்றுக்கு  நவீனகால புத்தங்கள், மற்றும் சஞ்சிகைகள் வந்து சேரும் வழிவகைகள் செய்து வைப்பதும் முக்கியமாகும்.

 

அடுத்து வெள்ளி மேடைகளில் ஏறக்கூடியவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயம், தமது வெள்ளி உரைக்கான முழுமையான தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்வதாகும். குறிப்பாக சொல்லிக் காட்டுவதென்றால், தற்காலத்தில் தனியார் பாடசாலைகளுக்கு செல்லுகின்ற ஆசியர்கள் அன்றாடம் அடுத்தனால் கற்பிப்பதற்கான தயார் நிலையை ஏற்பாடு செய்துகொள்ள நிர்பந்திக்கக் படுகின்றனர். அந்த ஆசியர்களைப் போல் தமக்கும் அதிகம் சம்பளம் வேண்டும் என ஏங்குகின்ற இந்த கதீப் மார்கள், ஒரு வாரத்துக் ஒருமுறை செய்யக் கூடிய இந்த வெள்ளி உரைக்கு எந்தளவு தயார் நிலை செய்கின்றனர் என்பது கேள்விக்குறிய விடயமாகும். இவ்வாறு வெள்ளி மேடைகளில் ஏறுகின்ற இவர்கள் எப்படியெல்லாம் பைத்து படிக்கின்றனர் என்பது விளப்பத்துடன் விளிப்பாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெளிவாகும். அரபு தெரியாமல், கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், தெரிந்திருந்தும் தூங்கிக் கொண்டிருப்பவர்களும் அது எப்படி விளங்கும் என்பது சொல்லாமலேயே விளங்கங்கூடிய விடயங்களாகும். அந்த வகையில் தாம் வெள்ளி மேடைகளில் ஓதக் கூடிய அரபு ஓதல்களும், அங்கே சுட்டிக் காட்டக் கூடிய அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் என்பன முறையாக எழுதப் பட்டு ஒப்புவிக்கப் படுவதுடன் ஏனய அம்சங்களும் முறைப்படி ஒப்புவிக்கப் படுவதில் அக்கரை செலுத்தப் படவேண்டும்.

 

அத்துடன், கதீப் மார்களை பயிற்றுவிக்கக் கூடிய பாசரைகள் மற்றும் பயிர்ச்சி நெறிகள் (கோர்ஸ்) அறிமுகப் படுத்தப் படவேண்டிய ஒரு தேவையுமுள்ளதாகவே நான் உனர்கிரேன். சிறந்த பேச்சாளர்களை அழைத்து தமது மேடைகளில் மாணவர்களுக்காக பேசச் சொல்வது போல், பேச்சுப் பயிர்ச்சி வளங்கக் கூடியவர்கள் அழைக்கப் பட்டு, பயிர்ச்சி வளங்கும் முறை அறிமுகப் படுத்தப் படுவதற்கான தேவையும் இருப்பதாகவே கருதுகிறேன்.

 

அவ்வாறே இந்த வெள்ளி ஒன்று கூடலில் (ஜும்மா) பங்கு பற்றக் கூடியவர்களின் முயர்ச்சியும், பங்களிப்பும் இங்கு மறுக்க முடியாததாகும். குறிப்பாக ஒன்றை சொல்வதென்றால், யாராவது ஒருவர் ஒரு சிறந்த வெள்ளி உறையை செவிமடுத்தால், முன்பின் யோசிக்காமல் நேரடியாக அன்று உறை நிகழ்த்தியவரை அணுகி, அவறைப் பாராட்டி அவருக்கு ஒரு தொகைப் பணத்தை அன்பளிப்பாக கொடுக்கப் பழக வேண்டும். இது நன்மைக்கு உதவுவதாகவும், பிறரை ஊக்குவிப்பதாகவும் அமையும். இப்படியான பொதுமக்களின் நற்பங்களிப்பு இல்லாமல் போனமையும் வெள்ளிமேடைகள் சிறப்பாக இயங்காமல் போனமைக்கான காரணங்களில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.

  

மேலே சுட்டிக் காட்டப் பட்ட அம்சங்கள் மற்றும் சொல்லத் தவறிய அம்சங்களை யாரெல்லாம் பின்பற்றி தமது வெள்ளி மேடை உறைகளை சிறப்பாக அமைத்துக் கொள்கின்றனரே அவர்களுக்கு அல்லாஹ் இவ்வுளகிலும் மரு உலகிலும் அருள் பாளிப்பானாக………………..

No comments:

Post a Comment

We value your feed back

    வரவேற்பு "நிம்மதி" எனும் தலைப்பில் இங்கு தொகுக்கப்பட்டுள்ள ஆக்கங்கள், நீண்ட காலப்பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட...